கங்கை நதி தூய்மை திட்டம்: 5 மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

ganga riverபுதுடில்லி: பா.ஜ.வின் கனவு திட்டமான கங்கையை தூய்மை படுத்தும் திட்டம் குறித்து 5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

மத்தியில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான கங்கை தூய்மை திட்டம் அறிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைபிடித்தது.

கங்கையை எனது தாயாக நினைக்கிறேன்

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றார். அங்கு நடந்த கூட்டத்தில் கங்கையை எனது தாயாக நினைத்து வணங்குகிறேன். இந்த கங்கை நதி எனது ஆட்சிகாலத்தில் தூய்மைப்படுத்தப்படும் என்றார்.
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாரணாசி சென்ற பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கங்கை நதிக்கரையில் படிந்துள்ள மண்மேடுகளை மண்வெட்டியால் வெட்டி அகற்றினார்.

இதைத்தொடர்ந்து கங்கை நதி தூய்மை திட்டம் தீவிரப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆயத்தமாகி வருகிறது.இதன் ஒரு பகுதியாக கங்கை நதி தூய்மை திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 2040 கோடி நிதி ஒதுக்கியது.

5 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

இந்நிலையில் கங்கையை தூய்மைப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகளை கேட்டறிய, மேற்குவங்கம், உத்திரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், உத்தர்கண்ட் ஆகிய 5 மாநில முதல்வர்களுடன் டில்லியில் பிரதமர் மோடி ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்.இக்கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி உள்ளிட்ட அமைச்சக அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

-http://www.dinamalar.com

TAGS: