பேச்சுரிமை இருக்கிறது: ரோஸ்மாவையே குறை சொல்ல முடிகிறது, இல்லையா?

rahநாட்டில்  பேச்சுரிமை  இல்லையென்று  சொல்வது யார், இருக்கிறது  என்று  அடித்துச்  சொல்கிறார்  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டாஹ்லான்.

“அரசாங்கத்தின்  திறமைக்குறைவு  பற்றிப்  பேச  வேண்டுமா, ஊழலை  பற்றிப் பேச  வேண்டுமா? இந்நாட்டில்  எதைப்  பற்றியும்  பேசலாம்.

“ரோஸ்மாவைப்  பற்றிக்கூட பேசுகிறார்கள். ரோஸ்மா  அதற்கெதிராக  நடவடிக்கை  எடுக்கவில்லையே”, என  கோத்தா  பெலுட்  எம்பியிமான  ரஹ்மான் கோலாலும்பூரில்  மாணவர்  கருத்தரங்கொன்றில்  கூறினார்.