பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் 80,000 பேர் சாவு

pakistan1பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போரில், 10 ஆண்டுகளில் 48,000 பொதுமக்கள் உள்பட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக புதிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக, நோபல் பரிசு பெற்ற அணு ஆயுத போருக்கு எதிரான சர்வதேச மருத்துவர்கள் கூட்டமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் “எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்’ பத்திரிகையில் வெளிவந்துள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாகிஸ்தானில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் இறுதி வரை, 81,860 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட ஆய்வுகள், ஐ.நா. அமைப்பு வெளியிட்ட தகவல்கள், அரசு அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com