எம்பிகள்: ரசாக் விடுவிக்கப்பட்டதற்குச் சரியான விளக்கம் தேவை

altanஅல்டான்துன்யா  ஷாரீபு  கொலைக்கு  உடந்தையாக இருந்த  அப்துல்  ரசாக்  பகிண்டா  விடுவிக்கப்பட்டதற்கு  எதிராக  மேல்முறையீடு  செய்யாததற்கு  புத்ரா  ஜெயா  கொடுத்த  விளக்கம்  திருப்தியளிக்கவில்லை  என  எதிரணி  எம்பிகள்  இருவர்  கூறினர்.

“அமைச்சரின்  பதில்  வழக்கத்துக்கு  மாறானதாகவும், முரண்பாடு மிக்கதாகவும்,  அரைவேக்காட்டுத்தனமாகவும் இருக்கிறது. அதற்குக்  கூடுதல்  விளக்கம்  தேவை.

“முதலில் ‘போதுமான  ஆதாரங்கள்  இல்லை’ என்றால்  அப்துல்  ரசாக்  கொலைக்கு  உடந்தை என்று  ஏஜி  அலுவலகம்  ஏன்  வழக்கு தொடுக்க  வேண்டும்?”, என  தைப்பிங்  எம்பி  ங்கா  கோர்  மிங்  நாடாளுமன்ற  வளாகத்தில்  நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டத்தில் வினவினார்.

அக்கூட்டத்தில் பொக்கோக்  சேனா  பாஸ்  எம்பி  மாபுஸ்  ஒமாரும்  கலந்து  கொண்டார்.

திங்கள்கிழமை, நடப்பில்  சட்ட  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி   ங்காவுக்கு  அளித்த  எழுத்துப்பூர்வமான  பதிலில்  போதுமான  ஆதாரங்கள்  இல்லை  என்பதால்தான்  அப்துல்  ரசாக்  விடுவிக்கப்பட்டார்  என்று  கூறியிருந்ததுதான்  இந்த  எம்பிகளுக்கு  மனநிறைவை  அளிக்கவில்லை.

கொலை  செய்யப்பட்டவரின்  குடும்பத்துக்கு  நியாயம்  கிடைக்க  வேண்டும். அதற்கு  முறையான  விளக்கம்  தேவை என்று  மாபுஸ்  கூறினார்.

“முடிவு  கொலையுண்டவர்  குடும்பத்துக்கு  நியாயம்  செய்வதாக  இருத்தல்  வேண்டும். விடை  கிடைக்காத  கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட  வேண்டும்”, என்றாரவர்.