சிலாங்கூர் இந்தியர்களுக்கு ஆட்சிக்குழு பதவி, ஆனால்.?

pakatanஞாயிறு மலரில் மேற்காணும் பதிவை பார்த்தேன். துணிவாக படைத்தவருக்கு பாராட்டுக்கள். அதன் தேடலில் இன்னும் சில
அவசிய தேவைகளை ஊடுருவ நான் ஆசைப்படுகிறேன்.

2008 பிறகு 2013 பொதுத் தேர்தல்களின் போதும் சிலாங்கூர் இந்தியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பாகாதானுக்கு குறிப்பா பி கே ஆர் வழி சமூகத்துக்கு ஏதோ ஒரு புதிய பொருளாதார் வெளிச்சம் கிடைக்கப்போவுது என்ற நம்பிக்கையில் ஒரு மாற்று ஆட்ச்சிக்குழு உறுப்பினரையும் போராடியே பெற்றோம்.

பி கே ஆரின் மாண்பு மிகு சேவியரையும் இணைத்து இருவர் வர வேண்டும் என்பதுதான் அன்வாரிடம் நாங்கள் கொடுத்த எங்களின் கடசி பரிந்துரை.முடிவு ஒன்றாக மாறியது கட்சி ரீதியில் பி கே ஆர் இந்தியர்களுக்கு கட்டுரை சொன்னது போல ஏமாற்றம்தான்.

இதற்கு முன் தேசிய முன்னணி கொடுத்த அதே ஓர் இந்தியர் வரம்தான் பாகாதான் ஆட்சியிலும் கிடைத்தது. மாண்புமிகு சேவியரின் சாதனை என்பது பாகாதானின் தேர்தல் கொள்கை அறிக்கையாக இருந்தாலும் சமூதாயத்தின் மீது சேவியரின் வேகத்தை குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் கோயில்கள் அவதாரம் விவேகமிக்க காலம் எனலாம்.

பொதுவாக சிலாங்கூர் இந்தியர்களுக்கு தோட்டததுறையும், ஏழ்மை பரிவுமிக்க சமூதாய சிக்கல் மாட்டுமே அல்ல. அதையும் தாண்டி 2020 வளர்ச்சிக்கால வெடியளுக்கு பொருளாதார வின்மீன்களை பிடிக்க எந்த முயற்சியும் இல்லை என்பதுதான் நமது சோகம்.

சிலாங்கூர் பி கே ஆரில் நமக்கு இன்னொரு இந்தியர் சட்ட மன்ற உறுப்பினர் இருந்தும் பாகாதானின் முடிவு ஏமாற்றம் என்பதை இந்த நீதிக் கட்சி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தியர்களின் ஆதரவு பெற்ற பி கே ஆர்,டி ஏ பி , மற்றும் பாஸ் இந்தியர் மன்றம் இன்னும் இந்தியர் சார்பு கோவில் , பெ .ஆ சங்கங்கள், எஞ்சிவோக்கள் இந்தியர்கள் தேர்தல் ஆதரவை பாகாதான் குறிப்பா பி கே ஆர் நன்றியுடன் நினைத்து கடமை ஆற்ற வேண்டும்.

நடப்பு எக்சொவுக்கு அதிக அரசியல் பழு இருந்தால் அவர் இந்தியர்களுக்கான சிறப்பு அதிகாரிக்கு மாநில முதல்வரிடமும் ஆட்சிக்குழுவின் ஆதரவுக்கு கட்சியின் ஆலோசனையை கேட்டு முன் வைக்க வேண்டும்.

மலாய்ககாரர்களுக்கும் சீனர்களுக்கும் அரசியல் நடவுகளை தெரிந்து மாநிலத்தில் பயன் அடையும் அளவுக்கு இந்தியர்களும் தமிழர்களுக்கும் இந்தியர் சார்பு எஸ்கொவில் அந்த வாய்ப்பு இல்லை. மாண்பு மிகு கணபதி ராவு அலுவலகத்தில் கூடும் மாக்களின் எண்ணிக்கை மற்ற எஸ்கொவில் இல்லை என்றே எனது ஆய்வு சொல்ல்கிறது. ஒரு நாள் காலை 9 மணிக்கு வந்த 60 வயது தாய் மாலை 3 மணியாகியும் கவனிக்க ஆள் இல்லை. ஆனால் அதிகாரிகள் நடப்பதுவும் சந்திப்பிலும் இருக்கும் வேகம் சிக்கலை களைவதில் இல்லை என்ற பல புகார்கள் உள்ளன.

மனித வளம் நிர்வாக் ஆளுமை எவ்வளவுதான் இருந்தாலும் இந்தியர்களின் தேடல் ,தேவை , தீர்வு , பொருளாதார பயன்கள் பல மடங்கு பாக்கியாக இன்னும் ஆதே தேசிய முன்னணியின் சாக்கு போக்குதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சிலாங்கூரில் மற்ற இனத்தவர்கள் வசதிக்கும் வாய்ப்புக்கும் பொருளாதார வளப்பத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் பஞ்சமில்லை. எல்லாம் நிம்மதியாக உள்ளார்கள். நமக்கும் நமது அரசியல் பிரதிநிதிகளுக்கும் இதில் தெளிவு இருந்தும் பரிந்துரைகள் இல்லாத கதவை தட்டி கேற்க வக்கற்ற அரசியல் ஆளுமை எதற்கு என்றுதான் நமக்கு எமாற்றமாக உள்ளது.

சிலாங்கூரில் பாகாதான் இந்தியர்களை தனியாக கவனிக்க மாநில முதல்வர் அஸ்மின் நேரடி அதிகாரத்தில் தனி சிறப்பு அதிகாரி காலத்தின் காட்டாயம. அதுபோல GLC . மற்றும் இதர சிலாகூர் மாநில துணை நிறுவனங்களில் இந்தியர் பொது உறவு அதிகாரிகள் அமர்த்துவதும் மிக அவசியமான தேவை. இப்படி பகுதிகள் வாரி மக்களின் வீட்டு மனை சிக்கல், வணிக மேம்பாட்டு சிக்கல், பொருளாதார திட்டமைப்பு சிக்கல், சமூக மேம்பாடு ,கலை கலாசார கல்வி போன்ற அதி முக்கிய சீர்கேடுகளை களைய முடியும். இதற்கு இதர சட்டமன்ற நாடாளுமன்ற இந்தியர் பிரதிநிதிகள் சமசீர் சிந்தனையில் பரிந்துரைகளை வழங்க ஆதரிக்க முன் வர வேண்டும்.

மாநில தண்ணீர் சிக்கலை பேசும் மாண்பு மிகு சார்லஸ் அவர்கள் சிலாங்கூர் மாநிலத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பல விவரம் தெரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அது போல மணிவண்ணனும் சிவ ராசாவும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் ஏன் நமது சமூக விவகாரத்தில் ஆமை போல பின்னோக்கி புறம் நழுவி போகிறாகள் என்று தெரிய சமுதாயம் ஆசைப்படுகிறது. வாசல் கதவு அடைப்பு என்றால் ஜன்னல் வழி பூர இவர்களுக்கு பதவி உரிமை தந்துள்ளோம்.

அரசியலில் அடுத்தப்பதவி அடக்கி வாசிக்கத்தான் என்றல் சமுதாய வளம் வீண்தான். இந்த துரோகம் அடுத்த தேர்தலில் கொக்கரிக்கும் கைகளை உயர்த்த ஆளில்லாத அவதி வேண்டாம்.

அடுத்த தேர்தல் வர இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது. மாநில முதல்வர் அஸ்மின் அவர்கள் திறமை ஆளுமை தூர நோக்குங்கால் பார்வை வெறும் அரசியல் சாங்கியம் சாணக்கியம் என்று இல்லாமல் சமூக ஓலங்களை மனசாட்சியுடன் உரசி பார்க்க வேண்டும். 2020 அதற்குப்பினும் இந்தியர்களுக்கு திட்டமிட வழி காட்ட இதுதான் தருணம். ஒரு வேளை பதவிக்கு நிற்கும் ஊமைகள் மௌனம் முதல்வருக்கு வசதி என்றால் மக்கள் நிறுவை நிச்சயம் நகரும்.

நாட்டின் IS , HUDUD , syariah , தண்ணிர், நிலம் , சொத்து சிக்கல்கள் என்பது நடுவண் சிக்கல். ஆனால் மாநில இந்தியர்கள் தீர்வு எனபது மாநில முதல்வர் கையில் உள்ள பொன் முட்டை அதை வெண் முட்டையாக்குவதும் அல்லது காக்க வைத்து அழுகி கெடுத்து தாய் கோழிபோல தள்ளி விடுவதும் உங்கள் பொறுப்பு, ஆனால் மாநில மக்கள புது முட்டை இடுவதை யாராலும் தடுக்க முடியாது. முடிக்கும் முன் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் பிகே ஆரை ஒப்படைத்து விட்டோம் அதை சரியாக் செய்வில்லை என்றால் இதை தாண்டி வெற்றி பெற முடியாது. புதிய சாதனைகளே ஒரு புதிவர் மற்றவர்களுக்கு அளிக்கும் சிறந்த அன்பளிப்பாகும்.

வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்தமுடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய் பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.

வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே சமுதாயத்துக்கும் தன வாழ்க்கையிலும் வெற்றி பெறுவான்.

-ம .அ.பொன் ரங்கன் 
பி கே ஆர் அம்பாங் சிலாங்கூர்