லொக்: ஹாடியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பக்கத்தானிடம் இல்லை

lokeபக்கத்தான்  ரக்யாட்  ஒரு  பதிவு  பெற்ற கட்சி அல்ல  என்பதால்  அக்கூட்டணியின்  நிலைப்பாட்டை  மீறிச்  செயல்பட்ட பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  அவாங்குக்கு  எதிராக  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கும்  அதிகாரத்தை  அது  பெற்றிருக்கவில்லை என்கிறார்  டிஏபி  ஏற்பாட்டுச்  செயலாளர் அந்தோனி  லொக்.

சங்கப்  பதிவகத்தில் அதன்  பதிவு  இன்னும்  நிலுவையில்  உள்ளதாகவும்  அதன்  காரணமாக  பக்கத்தான்  இப்போது  உறுப்பினர்களைக்  கட்டுப்படுத்தும்  அமைப்புவிதிகளைப்  பெற்றிருக்கவில்லை என்றும்  அவர் சொன்னார்.

அதனால்தான்  கூட்டணியில்  பொதுவான  நிலைப்பாட்டை  மீறி  கிளந்தானில் ஹுடுட்டைக்  கொண்டுவர  தனி உறுப்பினர்  சட்டவரைவை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்த  ஹாடிக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்க முடியவில்லை.

சினார்  ஹரியான்  ஆன்லைனிடம்  லொக்  இவ்வாறு  கூறினார்.