ஜாஹிட்: பெர்மாதாங் பாவில் அதிர்ச்சி காத்திருக்கிறது

byமே 7  பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தல்  ஓர்  அதிர்ச்சியை  உண்டுபண்ணும் என்று  அம்னோ  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார்.

அன்வார்  இப்ராகிம்  அம்னோ  உறுப்பினராக இருந்த  காலத்திலிருந்து  வென்று  வந்துள்ள  அத்தொகுதியில்   “அதிர்ச்சிதரும்”  அரசியல்  மாற்றம்  நிகழப்  போகிறது  என்றாரவர்.

அதை  விளக்கும்படி  கேட்டதற்கு ஏப்ரல்  23வரை  காத்திருக்குமாறு  அவர்  செய்தியாளர்களைக்  கேட்டுக்கொண்டார். அன்று  அம்னோ  அதன்  வேட்பாளரை  அறிவிக்கும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர்  ஆணா, பெண்ணா  என வினவியதற்கு  அம்னோ  பால்  வேறுபாடு  பார்ப்பதில்லை  என்றார்.

“ஆணோ  பெண்ணோ  எங்களுக்கு  எல்லாம்  ஒன்றுதான்”, என ஜாஹிட்  கூறினார்.