முஸ்லிம்களுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்கும் விவகாரம் அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது

zakatபொருள், சேவை  வரி  செலுத்துவதிலிருந்து  முஸ்லிம்களுக்கு  விலக்களிக்கப்பட  வேண்டும்  என்ற  தம்  பரிந்துரை அமைச்சரவையின்  கவனத்துக்குக்  கொண்டு  செல்லப்பட்டுள்ளதாகக் கூட்டரசுப்  பிரதேச  முப்தி  சுல்கிப்ளி  முகம்மட்  அல்  பக்ரி  கூறினார்.

அந்த  ஆறு  விழுக்காடு  வரி ‘ஜக்காத்’(இஸ்லாமிய  வரி)  செலுத்துவோருக்குக்  குறைக்கப்பட  வேண்டும்  அல்லது  அடியோடு  அகற்றப்பட  வேண்டும்  என சுல்கிப்ளி  நேற்று  முகநூல்  பதிவு  ஒன்றில்  வலியுறுத்தினார்.

“இரட்டை  வரிவிதிப்பு  முஸ்லிம்களுக்குச் சுமையாக  அமையும்  என்பதால்  அதைத்  தவிர்க்க ஒரு வழி  உருவாக்கப்பட  வேண்டும்  என  முன்மொழிகிறேன்”, என்றாரவர்.

புதிய வரி மூலம்  கிடைக்கும்  பணம்  மேம்பாட்டுப்  பணிகளுக்குச்  செலவிடப்பட  வேண்டும்  என்றும்  அவர்  விரும்புகிறார்.