மகாதிர்: நஜிப் வீட்டுத் திருமணம் ‘நூற்றாண்டின் மிகப் பெரிய திருமணம்’

weddingபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  மகளின்  திருமணம்  மிக  ஆடம்பரமாக  நடைபெற்றதாக  விமர்சித்துள்ள  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அதை “இந்நூற்றாண்டின்  மிகப்  பெரிய  திருமணம்”  என்றும் வருணித்துள்ளார்.

“இந்த  ஆண்டுக்கு மட்டுமல்ல  இந்த  நூற்றாண்டுக்கே மிகப்  பெரிய  திருமணம்  இதுதான்.

“அவர்கள்  300  பேருடன்  கஸக்ஸ்தான்  சென்றார்களே  அதை மைய  நீரோட்ட  ஊடகம்  எதுவும் தெரிவிக்கவில்லை.

“அந்த 300 பேர்  யார்?”, கோலாலும்பூரில்  ஒரு  நிகழ்வில்  பேசியபோது  முன்னாள்  பிரதமர்  இவ்வாறு  வினவினார்.

இதனுடன் ஒப்பிடும்போது  தம்  பிள்ளைகளின்  திருமணங்கள்  மிகச்  சாதாரணமானவை  என்றாரவர்.

“என்  பிள்ளைகளின் திருமணங்கள்  இங்கு  யாருக்காவது  நினைவில்  இருக்கிறதா….யாருக்கும்  அதைப்  பற்றித்  தெரியாது.

“நான்  கருமி. பலரை  அழைக்கவில்லை. செலவு  செய்ய  என்னிடம்  பணமில்லை”, என மகாதிர்  கூறினார்.