‘மகாதிருக்கே ஜிஎஸ்டி புரியவில்லை என்றால் மக்களின் நிலை என்ன?’

asriமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கு  பொருள், சேவை  வரி (ஜிஎஸ்டி) புரியவில்லை  என்று கூறி  அவரைச்  சிறுமைப்படுத்தியுள்ளதாக  நிதி துணை அமைச்சர்  அஹ்மட்  மஸ்லானைக் கடுமையாக  திட்டியிருக்கிறார் பெர்லிஸ்  முப்தி  முகம்மட்  அஸ்ரி  சைனுல்  அபிடின்.

“டாக்டர் எம்முக்கே  ஜிஎஸ்டி  புரியவில்லை  என்கிறபோது  தேசிய  பொருளாதாரத்தில்  அவரளவுக்கு  அனுபவமற்ற  மலேசிய  மக்கள்  மட்டும்  ஜிஎஸ்டியைப்  புரிந்துகொள்வார்களா?

“பெரும்பான்மை  மலேசியர்களால் ‘அறிவில்  குறைந்தவராக’க்  கருதப்படும்  ஒருவர்,  அறிவுக்கூர்மைக்குப்  பெயர்பெற்ற  டாக்டர்  எம்முக்குப்  பொருள், சேவை  வரி  புரியவில்லை  என்று கூறுவாரானால் அவர் தாம்  டாக்டர் எம்மைவிட  அறிவில்  மேம்பாட்டவர்  எனக்  கூறுகிறாரா?”, என பெர்லிஸ்  முப்தி  மஸ்லான்மீது  வசை  பாடினார்.

மகாதிருக்கு  அந்த  வரி  பற்றிப்  புரியவில்லை அல்லது  அவரைச்  சுற்றியிருப்பவர்கள்   அவருக்கு அதைப்  பற்றித்  தப்பான  தகவல்களைத்  தெரிவித்திருக்கலாம்  அதுதான்  அந்த  வரியை  இரத்துச் செய்ய  வேண்டும்  என்கிறார்  என மஸ்லான்  அஸ்ட்ரோ  அவானியில்  கூறியதாக  வெளிவந்த  செய்தி  குறித்து  அஸ்ரி  இவ்வாறு  எதிர்வினை  ஆற்றினார்.