‘ஷரிசாட், ஜாஹிட்டின் குத்தல் பேச்சுகள் வெறுப்பேற்றுகின்றன’

zuraidaபெர்மாத்தாங்  பாவில்  சுஹாய்மி  சபுடினுக்காக  பரப்புரை செய்யும்  பிஎன் தலைவர்கள் கூட்டத்தினரைக்  கவர்வதற்காக  பாலியல்  ஜோக்குகள் சொல்வதை வழக்கமாகக்  கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதை  எல்லாரும்  இரசிக்கிறார்கள்  என்று  சொல்வதற்கில்லை.

பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர்  ஸுரைடா  கமருடின், அம்னோ  மகளிர்  தலைவர் ஷரிசாட்  ஜலில், அம்னோ  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியைப்  பின்பற்றி  ஆபாசப்  பேச்சு  பேசுவது வெறுப்பேற்றுவதாகக்  கூறினார்.

“சர்க்கஸும்  கோமாளிகளும்  மீண்டும்  நகரம்  வந்திருக்கிறார்கள்.  செக்ஸ்  ஜோக்ஸ்  மட்டுமே  சொல்லத்  தெரிந்த  அம்னோ  அமைச்சர்களும்  தலைவர்களும்தான்  அதில்  பங்கேற்பாளர்கள்”, என்று  அம்பாங்  எம்பியுமான  ஸுரைடா  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

பரப்புரை  செய்ய  வரும்  தலைவர்களுக்கு  அதுவும், 50ஆண்டுகளுக்குமேலாக  ஆட்சியில்  உள்ள  ஒரு  கட்சியின்  தலைவர்களுக்கு ஓரளவாவது  தகுதி  வேண்டாம் என்றவர்  சாடினார்.