தலைவர்களை மாற்றுவது நல்லதல்ல: ஹிஷாமுடின் எச்சரிக்கை

hishamமற்ற  நாடுகளும்  தலைவர்களை  மாற்றியுள்ளன. ஆனால், அவற்றின்  பிரச்னைகள்  தீரவில்லை, சொல்லப்போனால் மேலும்  மோசமடந்துள்ளன  எனத் தற்காப்பு அமைச்சர்  ஹிஷாமுடின்  எச்சரிக்கிறார்.

நேற்றிரவு  பெர்மாத்தாங்  பாவில்  பேசிய  ஹிஷாமுடின் லிபியா,  ஈராக், எகிப்து  ஆகிய  நாடுகளின்  முன்னாள் தலைவர்கள் முவாமாமார்  கடாபி, சடாம்  உசேன், ஹுஸ்னி  முபாராக்  ஆகியோருக்கு  நேர்ந்த  கதியை  நினவுப்படுத்தினார்.

“பொருள், சேவை  வரியால்  ஆத்திரம்,  அதனால் (அரசாங்கத்தை)  மாற்ற  நினைக்கிறீர்கள்.

“அவர்களுக்கும்  கடாபிமீது  ஆத்திரம்  அதனால்  அவரைச்  சுட்டுக்  கொன்றனர், சடாம்மீது  ஆத்திரம் தூக்கிலிட்டார்கள், முபராக்மீது  ஆத்திரம்(சிறையிலிட்டனர்).

“பெர்மாத்தாங்  பாவ்  மக்களைக்  கேட்கிறேன். அந்நாடுகளின்  பிரச்னைகள்  தீர்ந்தனவா”, என்றவர்  கேட்டதும்  கூட்டத்தினர் “இல்லை”  என்று  கூறினர்.