விவாத மேடை, நேரடி ஒளிபரப்பு! இந்தியர்கள் “மேம்பாடு”? மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா?

forum liveஇன்று மாலை  மலேசியாகினியில் (@kini) நடைபெறவுள்ள செம்பருத்தியின் விவாத மேடை 8.30 முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.  live.malaysiakini.com (இங்கே சொடுக்கவும்) என்ற அகப்பக்கத்தில் நேரடியாக பார்க்கலாம். பதிவிறக்கமும் செய்யலாம்.

என்ன தலைப்பு இது? என்ற வினாக்களை பலர் தொடுத்துள்ளனர். யார் அதிகமாக இந்தியர்களை மொட்டை அடித்தார்கள்? என்ற தலைப்புதான் சரியானது என்று நொந்தவர்களும் உண்டு.

மகாதிர் காலத்தில்தான் இந்தியர்களின் ஒரே கட்சியான மஇகா மிகவும் வலிமையாக இருந்தது. அதிகமான இந்தியர்கள் ஆளும் கட்சியின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருந்தனர். அப்போது அசைக்க முடியாதா ஆசாமியாக மஇகா-வின் சாதனைத்தலைவர் சாமிவேலு இருந்தார். அதிகமான இந்தியர்கள் தேசிய முன்னணியை ஆதரித்ததும் அப்போதுதான்.

saamy-vellu_najib_mahathir_600ஆனால், நஜிப் காலத்தில் மஇகா மட்டுமல்லாமல் அனைத்து தேசிய முன்னணியின் கட்சிகளும் வீரியம் இழந்தன. பொதுத்தேர்தலில் (2008) மஇகாவின் மூன்று நபர்கள் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் மண்னைக்கவ்வாமல் எழ முடிந்தது. பாதிப்படைந்த இந்தியர்களில்  பாதிக்குப்பாதி தேசிய முன்னணியை புறக்கணித்தனர்.

அதன் பிறகுதான், அரசாங்கம் அதிகமான பணத்தை இந்தியர்களுக்காக ஒதுக்க ஆரம்பித்தது.

ஆனால், மேம்பாடு என்பது என்ன? அதை பண ஒதுக்கீட்டால் மட்டும் பெற முடியுமா? பசியாக உள்ள ஒருவருக்கு உணவு கொடுத்து அவரை மேம்படுத்த முடியுமா?

சிலர் இந்தியர்கள் மேம்பாடு அடையவேயில்லை என்றும் புலம்புகின்றனர். நாட்டின் மேம்பாட்டுக்கு உகந்த வகையில் இந்தியர்கள் மேம்பாடு அடையவில்லை என்பதுதான் சரி. அதேவேளையில் முழுமையாக மேம்பாடி அடைந்த சமூகம் உருவாக அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது.

விவாத மேடைக்கு வரும் தேசிய முன்னணியின் தேவமணியும், மக்கள் கூட்டணியின் சார்ல்ஸ் சந்தியாகோ, சேவியர் ஜெயகுமார், ஜெயகுமார் தேவராஜ் மற்றும் ஹிண்ராப் கணேசன் ஆகியோர் எவ்வகையான விவாதங்களை முன்வைப்பர்.

இதன் எல்லையில் அவர்களின் விவாதங்கள் நமக்கு கொடுக்கும் படிப்பினைதான் என்ன?

நாம் மேம்பாடு அடைய, இவை உதவ வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.