முகைடின் யாசின்: 1எம்டிபி விவகாரத்தை தள்ளிப்போட முடியாது

 

Muhyiddin breaksrank1எம்டிபி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கணக்காய்வு முடிவடைய வேண்டும் என்று அரசாங்கம் மக்களிடத்தில் அடிக்கடி கூறிவரும் வேளையில், கசியவிடப்பட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

அந்த வீடியோ கடந்த வாரம் பகாங்கில் நடைபெற்ற ஒரு பிரத்தியோக அம்னோ உறுப்பினர்கள் அடங்கிய சந்திப்பில் முகைதின் யாசின் அதிகாரிகள் இனிமேலும் காத்திருக்கக் கூடாது என்றுMuhyiddin breaksrank1 கூறுவதை பதிவு செய்துள்ளது.

“நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நாம் ‘பரவாயில்லை, இன்னும் கொஞ்ச நேரம் கொடுப்போம்’ என்று இருக்க முடியாது’. முடியாது!”, என்று முகைதின் யாசின் கோபமாகக் கூறுகிறார்.

இச்சம்பவம் ஜன்டா பாய்க்கிலுள்ள அம்னோ பயிற்சி மையத்தில் கடந்த சனிக்கிழமை 1எம்ஐடிபி கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கைக்கு காத்திருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட தினத்திற்கு அடுத்த நாள் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. பிரதமர் நஜிப்பும் இது போன்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த ஏழு நிமிட வீடியோவை நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ்சின் முன்னாள் ஆசிரியர் ஃபிர்டாவுஸ் அப்துல்லா நேற்று வெளியிட்டார்.

இந்த வீடியோ பதிவு வெளியானதால் செய்தியாளர்களின் கவனம் இன்று நாடாளுமன்றத்தில் நஜிப் வெளியிட்ட 11 ஆவது மலேசிய திட்டத்திலிருந்து முகைதின் யாசின் பக்கம் திரும்பியது. அந்த வீடியோ உண்மையானது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“அக்கருத்துகள் பிரத்தியோகமாக தெரிவிக்கப்பட்டவை…(இந்த விவகாரத்தை) நன்கு அறிந்துகொள்வதற்காக தெரிவிக்கப்பட்ட அவை என்னுடைய மற்றும் எனது அரசியல் சகாக்களின் கருத்துகளாகும்”, என்று முகைதின் கூறினார்.