கர்நாடக அரசு காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்: சரத்குமார்

sarathkumar_001சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’கர்நாடக அரசு தினந்தோறும் சராசரியாக 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் மூலமாக தமிழகத்திற்கு அனுப்புகிறது என்றும் குறிப்பாக காவிரியில் மட்டும் 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுகிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் மாநகரத்திற்குப் பயன்பாட்டில் உள்ள 1950 கோடி லிட்டர் தண்ணீரில் இருந்துதான் இவ்வளவு கழிவுநீர் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.

உடனடியாக கர்நாடக அரசு இதில் தலையிட்டு, கர்நாடகாவிலிருந்து வெளியாகும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி முறையில் அங்கேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கழிவு நீர் ஒரு துளி கூட காவிரியிலும், தமிழகத்திற்கு வரக்கூடிய பிற உபநதிகளிலும், பிற நீர் நிலைகளிலும் கலக்காது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு இதைக் கண்காணித்து கர்நாடக அரசுக்கு தகுந்த உத்தரவிட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

-http://www.nakkheeran.in

TAGS: