குடைப் புரட்சி இயக்கவாதியை மலேசியா நாடு கடத்தும்

wongகுடைப்புரட்சி  இயக்கத்தைச்  சேர்ந்த  ஜோசுவா  வோங்  இன்று  காலை  பினாங்கு  விமான  நிலையத்தில்  வந்திறங்கியதும்  தடுத்து  வைக்கப்பட்டார்.

வோங், ஹாங்காங்கில்  சீன எதிர்ப்பியக்கத்தைத்  தூண்டிவிட்டவர்.  அதற்காகவே  டைம்ஸ்  சஞ்சிகை  அவரது படத்தை  அதன்  அட்டையில்  வெளியிட்டுப்  பிரபலப்படுத்தியிருந்தது.

“என்னை  உள்ளே  விடக்கூடாது  என்றும் அடுத்த  விமானத்திலேயே  திரும்பிச்  செல்ல  வேண்டும்  என்றும்  உத்தரவு  வந்திருப்பதாக  அரசாங்க  அதிகாரி  ஒருவர்  சொன்னார்”, என  வோங்  தெரிவித்தார்.

குடிநுழைவு  அதிகாரிகள்  தம்மை  இழுத்துச்  சென்றதாக  வோங்  கூறிக்  கொண்டார். அதிகாரிகளுடன்  அவர் வாதாடுவதைப்  பார்க்க  முடிந்தது.  “வன்முறை வேண்டாம்”, என்றவர்  உரத்த  குரலில் கூறுவதும்  காதில்  விழுந்தது.