திடீர் தேர்தல் நடத்தி மகாதிர் வாயை மூடுவீர்: நஜிப்புக்கு பாஸ் அறைகூவல்

samadபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  சொந்தக்  கட்சிக்கே  நம்பிக்கை இல்லாமல்  போய்விட்டது  என்பதால்  அவர்  திடீர்  தேர்தலை  நடத்திப்  புதிய அதிகாரத்தைப்  பெறுவது  அவசியம்  என்கிறார்  எதிரணி  எம்பி  ஒருவர்.

அப்படிச்  செய்வதன்வழி  நஜிப்,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  உள்பட  அவரைக்  குறைகூறுவோரின்  வாயை  அடைக்க  முடியும்  என  காலிட்  சமட்(பாஸ்- ஷா ஆலம்)  கூறினார்.

“பிரச்னை  என்னவென்றால்,  எதிரணியினர்,  மக்கள் ஆகியோரின்  நம்பிக்கையை மட்டுமா  பிரதமர்  இழந்திருக்கிறார்,  சொந்தக்  கட்சிக்குள்ளும்  நெருக்கடியை  எதிர்நோக்குகிறார்”, என  மக்களவையில்  11வது  மலேசிய  திட்டம்மீது  வாதமிடும்போது  காலிட்  கூறினார்.

“இதற்குத்  தீர்வு  காண  ஒரே  ஒரு  வழிதான்  உண்டு. நாடாளுமன்றத்தைக்  கலைத்துவிட்டு  பொதுத்  தேர்தலை  நடத்துங்கள். மகாதிரின்  வாயை  அடக்க  இது  ஒன்றே  வழி”, என்றாரவர்.