மகாதிர்: பணத்தைக் காணாதவரை 1எம்டிபி குற்றவாளியே

cayman1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்தின்  பணத்துக்குச்  சரியான  கணக்குக்  காட்டப்படாதவரை  அந்நிறுவனத்தின்  நிர்வாகத்தைக்  குற்றவாளி  என்றே  கருதப்படும்  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார்.

கேய்மன்  தீவில்  முதலீடு  செய்யப்பட்ட  யுஎஸ்1.03(ரிம 4பில்லியன்) பற்றித்தான்  மகாதிர்  குறிப்பிடுகிறார். அப்பணம்  என்னவானது  என்பது  புரியாத  புதிராக  உள்ளது.

“கேய்மன்  தீவில் முதலீடு  செய்யப்பட்டதாகக்  கூறப்பட்டது. பின்னர்  அங்கிருந்து  கொண்டுவரப்பட்டதாகவும் இப்போது  சிங்கப்பூரில் இருப்பதாகவும்  கூறப்பட்டது. ஆனால், அப்பணத்தைக்  கண்ணால்  பார்க்க  முடியவில்ல.

“அப்பணத்தைக்  காணாதவரை  அதன்  இழப்புக்கு (1எடிபி) நிர்வாகம்தான்  பொறுப்பேற்க  வேண்டும்.

“பணத்தை  நிர்வாகம்  கையாடல்  செய்திருப்பதாகவே  கருதப்படும். இல்லையென்றால்  அதை  நிரூபிக்க  வேண்டும்”, என்று மகாதிர்  அவரது  வலைப்பதிவில்  பதிவிட்டிருந்தார்.