ஹாடி: குரைக்கும் நாய்கள் குரைக்கட்டும், ஹுடுட்டை விடேன்

hadiஎத்தனை  எதிர்ப்பு  வந்தாலும்  ஹுடுட்  சட்டத்துக்காகக் குரல்  கொடுப்பதை  நிறுத்தப்போவதில்லை  என்று  சூளுரைத்துள்ளார் பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்.

முஸ்லிம்கள்  அவர்கள்  டிஏபி-இல்  இருந்தாலும்  பாஸ், அம்னோ  அல்லது  வேறு எந்த  அரசியல்  கட்சியில்  இருந்தாலும் அச்சட்டத்தை  ஆதரிக்க  வேண்டும். அது  அவர்களின்  கடமை  என்றாரவர்.

“மக்களுக்கு  அமைதியான  முறையில் போதிப்பதே  எங்களின்  அணுகுமுறை. சில  தரப்புகள்  எங்களுடன்  சண்டையிட  விரும்பினாலும்  நாங்கள்  சண்டையிட  மாட்டோம்”, என்றவர்  கூறினார்.

“எங்கள்  சுலோகம்  இதுதான்: குரைக்கும்  நாய்கள்  குரைக்கட்டும், எங்கள் திட்டத்தை நிறைவேற்றும்  பணி,  எங்கள்  இலக்கை  அடையும்  பணி  தொடரும்”. நேற்றிரவு கப்பளா  பத்தாசில்  தம்  ஆதரவாளர்களிடையே  பேசியபோது  ஹாடி இவ்வாறு  கூறினார்.