புவா: பிஏசி-இல் என்னை எதிர்க்க 8பேர் இருக்கையில் பயமேன்?

pua1எம்டிபி  மீது தாம்  கூறும்  “அற்பமான  குற்றச்சாட்டுகளை”  உண்மையல்ல  என்று மறுப்பதற்கு  எட்டு  பிஎன்  எம்பிகள் பொதுக்  கணக்குக்  குழுவில்  இருக்கையில்  அக்குழுவின்மீது பிஎன் தலைவர்களுக்கு  “நம்பிக்கை  இல்லாமல்  போனது”  என்  என்று  அக்குழுவில் ஒருவரான  டோனி  புவாவுக்குப்  புரியவில்லை.

அக்குழுவில்  அவர்  இருக்கக்கூடாது  என்று  மேலும் பல  பிஎன்  தலைவர்கள்  கூறத்  தொடங்கியிருப்பது  கண்டு புவா  குழப்பமடைந்துள்ளார்.

“பிஎன்  அமைச்சர்களுக்கும்  தலைவர்களுக்கும் பிஏசி-இல்  உள்ள  பிஎன்  பிரதிநிதிகள்  எண்மரும்  நான்  கூட்டங்களில்  எழுப்பும்  ஆதாரமற்ற,  அற்பமான  குற்றச்சாட்டுகளை   தடுப்பார்கள்  அல்லது  பொய்யென்று  மறுப்பார்கள்  என்ற  நம்பிக்கை  அடியோடு  இல்லை  என்பதை  அறிய  வியப்பாக  உள்ளது”, என்று  புவா  கூறினார்.