பாரு: முஸ்லிம்களுக்கு‘சபலம்’ ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முஸ்லிம்-அல்லாதாரின் வேலையல்ல

dressசரவாக்  பிகேஆர்  தலைவர்  பாரு  பியான்,  முஸ்லிம்கள்  மீது  “மரியாதை” கொண்டு  முஸ்லில் -அல்லாதார்  உடைகள் அணிவதில்  ஒழுங்கு விதிகளைக்  கடைப்பிடிக்க  வேண்டும்  எனக்  கூறிய  பேரா  முப்தி  ஹருஸ்ஸானி  ஜக்கரியாவைக்  குறைகூறினார்.

முஸ்லிம்- அல்லாதார்  பொது  இடங்களில்  தங்கள்  உடலை  மூடி  மறைக்காதிருந்தால்,  வெளியில்  தெரியும்  தொடை  போன்ற  உடல்  பகுதிகள் முஸ்லிம்கள்  பாவம்  புரிவதற்குக்  காரணமாக  அமைந்து  விடலாம்  என்று  ஹருஸ்ஸானி  கூறியதாக  மலாய்  மெயில்  ஆன்  லைன்  அறிவித்துள்ளது.

ஹருஸ்ஸானியின்  கருத்து  நகைப்புக்கிடமானது  என்று பாரு  சாடினார்.  அந்த  முப்தி,  முஸ்லிம்கள் அவர்களின் சமயக்  கடமைகளை  நிறைவேற்றுவதை  உறுதிப்படுத்துவது  முஸ்லிம்-அல்லாதாரின்  பொறுப்பு  என்று  கூற  வருகிறாரா  என்றவர்  வினவினார்.