‘ஜுஸ்டோவின் கைது 1எம்டிபி மீதுள்ள கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரம்’

justoபெட்ரோசவூதி  இண்டர்நேசனல்  நிறுவன(பிஎஸ்ஐ) நிர்வாகி  சேவியர்  ஜுஸ்டோ  கைது  செய்யப்பட்ட  சம்பவம்  1எம்டிபி-இலிருந்து  மக்களின்  கவனத்தைத்  திருப்புவதற்குப்  பயன்படுத்திக்  கொள்ளப்பட்டிருக்கிறது  என்கிறார்  மூத்த  செய்தியாளர்  ஒருவர்.

அம்னோவுக்கு  அது  நல்ல  செய்தி, ஆனால் 1எம்டிபி  கடன்களாலும்  மற்ற  காரணங்களாலும்  பாதிக்கப்பட்ட  மலேசியப்  பொருளாதாரத்தில்  அது  தாக்கத்தை  ஏற்படுத்தாது  என  ஏ.காடிர்  ஜாசின்  கூறினார்.

“பிஎஸ்ஐ தலைவரை  தாய்  போலீசார்  கைது  செய்ததை  அறிந்து  அம்னோ  மேல்மட்டத்  தலைவர்கள்  புளகாங்கிதம்  அடைந்திருக்கலாம். ஆனால், நம்  பொருளாதாரத்தின்மீது  நம்பிக்கையை  வரவழைக்க  அது  உதவாது.

“அதை 1எம்டிபி  மீதுள்ள  கவனத்தைத்  திசைதிருப்பும்  தந்திரம்  என்றுகூட  சிலர்  சொல்கிறார்கள்”, என  காடிர்  தம்  வலைப்பதிவில்  கூறியுள்ளார்.