கிட் சியாங்: மகாதிர் ‘மலேசியாவைப் பாதுகாப்போம்’ கூட்டணியில் சேர வேண்டும்

saveலிம்  கிட்  சியாங்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்மீது  எவ்வளவோ  வசை  பாடியுள்ளார், குற்றச்சாட்டுகளைச்  சுமத்தியுள்ளார். ஆனால்,  இப்போது  நாட்டைப்  பாதுகாக்க  மகாதிரின்  உதவியைத்தான்  அவர்  நாடுகிறார்.

மகாதிரும்  அவருக்குத்  துணையாக  இருந்த  அப்துல்லா   அஹமட்  படாவியும்  மூசா  ஹித்தாமும்  சேர்ந்து  அடுத்த  பொதுத்  தேர்தலில்  பிஎன்னை  எதிர்க்க “மலேசியாவைப்  பாதுகாப்போம்”  கூட்டணி  ஒன்றை  அமைக்க  வேண்டும்  என்று  லிம்  முன்மொழிந்துள்ளார்.

1எம்டிபி  குளறுபடியால்  நாடு  அழிந்துவிடக்  கூடாது  என்றாரவர்.

“அரசியல்  தலைவர்கள்  அனைவரும்  கட்சி, இனம்,  சமயம்,  வயது,  பால் வேறுபாடு  பார்க்காமல் ஒன்றுசேர்ந்து  ‘மலேசியாவைப்  பாதுகாப்போம்’ திட்டமொன்றை  வகுக்க  வேண்டும்.

“டிஏபியும்  முற்போக்கு  அரசியல்  சக்திகளும் ‘மலேசியாவைப்  பாதுகாப்போம்’என்ற  எழுச்சியூட்டும்  இயக்கத்தில்  சேர   தயாராகவுள்ளன”, என்றாரவர். லிம், கோலாலும்பூரில்  கட்சித்  தலைமையகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

அப்படிப்பட்ட  கூட்டணிக்கு  ஏற்பாடு  செய்வது  யார்  என்று  வினவியதற்கு,  “மூன்று  துன்கள்(மகாதிர், அப்துல்லா,  மூசா), அல்லது  ஆளும்  கட்சியிலும் எதிரணியிலுமுள்ள  முற்போக்காளர்கள்  அல்லது  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  அதற்கு  ஏற்பாடு  செய்யலாம்”, என்றார்.

லிம்,  இதன்  தொடர்பில்  மகாதிரையோ  மற்ற  தலைவர்களையோ  இன்னும் அணுகவில்லை  என்பதால் அதைப்  பற்றி மேலும்  விவரிக்க விரும்பவில்லை.