கணக்கில் ரிம2.6 பில்லியன் வைக்கப்பட்டதை பிரதமர் ஒப்புக்கொண்டார் என்கிறார் முகைதின்

 

Leakedvideoநேற்றிரவு முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரது இல்லத்தில் பலரைச் சந்தித்து அவர்களுடன் நடத்திய உரையாடல் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு கசிய விடப்பட்டுள்ளது. தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அந்த வீடியோ பதிவில் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட கணக்கிற்கு பல மில்லியன்கள் மாற்றப்பட்டது பற்றி முகைதின் யாசின் பேசுவது தெரிகிறது.

அப்போது அவருடன் இருந்தவர்களில் கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் மற்றும் அம்னோ உச்சமன்ற முன்னாள் உறுப்பினர் காடிர் ஸெய்க் ஃபாட்ஸீர் ஆகியோரும் அடங்குவர்.

53 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவின் சில பகுதிகள் தெளிவாக கேட்க முடியவில்லை என்றாலும், முகைதின் இக்குற்றச்சாட்டுகள் பற்றி நஜிப்பை எதிர்கொண்டது தெரிய வருகிறது.

இப்பணம் எங்கிருந்து வந்தது என்று நஜிப்பை கேட்டதாகவும் அதற்கு அவர் மத்திய கிழக்கிலுள்ள ஒருவரிடமிருந்து வந்தது என்று பதில் கூறியதாக முகைதின் தம்முடைய வீட்டில் இருந்தவர்களிடம் கூறுகிறார்.

அதை ஏன் உங்களுடைய தனிப்பட்ட கணக்கில் வைத்தீர்? (தெளிவாக கேட்க முடியவில்லை).

“அவர் ஒப்புக்கொண்டார். நான் கேட்டேன்: (அதை) ஏன் உங்களுடைய தனிப்பட்ட கணக்கில் வைத்தீர்?”

பதவியிலிருந்து நீக்கப்பட்ட முகைதின் யாசின் நேற்றிரவு பலரை அவரது சந்தித்தார். 1எம்டிபி விவகாரம் குறித்து தாம் அளித்த ஆலோசனைகளை நஜிப் புறக்கணித்து விட்டதாக அவர் புலம்பினார்.

கசிய விடப்பட்டுள்ள அந்த வீடியோ பற்றி கருத்துரைத்த அப்துல் காடிர் இந்த உடையாடல் நடந்ததை உறுதிப்படுத்தினார். ஆனால், அதற்கு மேல் எதுவும் கூற அவர் மறுத்து விட்டார்.

அது ஒரு தனிப்பட்ட உரையாடல். அதை பதிவு செய்திருக்கக்கூடாது. அதை பதிவு செய்ய வேண்டாம் என்று அங்கிருந்தவர்களை முக்ரீஸ் கேட்டுக் கொண்டார் என்று காடிர் மலேசியாகினியிடம் கூறினார்.

பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் முகைதினின் உதவியாளர்களிடமிருந்து கருத்து எதுவும் பெற முடியவில்லை. பிரதமர் அலுவலகத்திடமும் தொடர்பு கொள்ளப்பட்டது.

 

Below is the full transcript from the video:

Muhyiddin: I asked  him (Najib) from whom? He  did not mention siapa nama dia, from somewhere in the Middle East.

Berapa banyak? Lepas tu dia ..(inaudible)… susah nak kiralah. Dia kata ‘a lot’, ‘a lot’.

Then saya kata kenapa masuk account you? …(inaudible)… kenapa masuk account Najib Razak? Duit berapa? 700 million US dollar. Kalau kali tiga point something… 2.6 billion that goes into his personal account.

Ini dia sebut. He admitted. So I said why did you put into your personal account?