பிரதமருக்கு எதிராக குற்றப் பத்திரிகையா? மறுக்கிறது எம்ஏசிசி

crimeசிறப்புப்  பணிக்  குழு, எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்மீது  மேற்கொண்ட  விசாரணை  தொடர்பில்  குற்றப்  பத்திரிகை  எதுவும்  தயாரிக்கப்படவில்லை  என  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி)  கூறியது.

அந்த  விசாரணை  இன்னும்  தொடர்வதாகவும்  விசாரணை  அறிக்கை  எதுவும்  சட்டத்துறை  தலைவர்(ஏஜி)  அலுவலகத்திடம்  ஒப்படைக்கப்படவில்லை  என்றும்  அந்த  ஆணையம்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறியது.

“எஸ்ஆர்சி  விவகாரம்  தொடர்பில்  விசாரணை இன்னமும்  தொடர்கிறது. அதனால்  அதன்மீது  குற்றப்பத்திரிகை  தயாரிக்கப்பட்டுவிட்டது  என்ற  பேச்சுக்கே  இடமில்லை”, என்று  அது  கூறிற்று.

அப்துல்  கனி  பட்டேல், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  குற்றஞ்சாட்டவிருந்தார்  அதனால்தான்  அவர்  ஏஜி பதவியிலிருந்து  தூக்கப்பட்டார்  என்று  சரவாக்  ரிப்போர்ட்-டில்  வெளிவந்த  செய்திக்கு  எதிர்வினையாக  எம்ஏசிசி  இவ்வாறு  தெரிவித்தது.