கதை கட்டுவோர்மீது மின்னல்வேக நடவடிக்கை: ஜாஹிட் சூளுரை

warnதுணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி,  “கதை கட்டுவோர்”மீது  எச்சரிக்கையின்றியே  நடவடிக்கை  எடுக்கப்படும்  எனக்  கூறினார்.

“இது  எச்சரிக்கை  இல்லை. எச்சரிக்கை  இன்றியே  நடவடிக்கை  எடுப்பேன். அதற்கு  நீங்கள்  கொடுக்கும்  விலை  அதிகமாக  இருக்கும்.

“எதையும்  இட்டுக்கட்டிக்  கூறாதீர்க்கள். இதுதான்  ஜாஹிட்  ஹமிடி, சரியா?”, என  உள்துறை  அமைச்சருமான  ஜாஹிட்  கூறியதாக  த  ஸ்டார்  அறிவித்துள்ளது.

செய்திகள்  ஒழுங்குமுறையாக  இருக்க  வேண்டும். உண்மையை  அடிப்படையாகக்  கொண்டிருக்க  வேண்டும்  என்றவர்  கூறினார்.

“ஒழுங்குமுறைக்கு  மதிப்பளிக்க  வேண்டும். உண்மையை  அடிப்படையாகக்  கொண்டு  எழுத  வேண்டும். திரித்து  மட்டும்  கூறவே  கூடாது”, என்று  ஜாஹிட்  கூறினார்.