ஷாபியின் தொகுதி ‘கலவர’த்துக்கு அஞ்சி நஜிப்பைப் புறக்கணித்தது

divisionஷாபி  அப்டாலின்  செம்பூர்ணா  அம்னோ தொகுதி  அதன்  ஆண்டுக்  கூட்டத்துக்கு  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு விடுத்த  அழைப்பை  மீட்டுக்கொண்டு  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினை  அழைத்துள்ளது.

ஆகஸ்ட்  15-இல்  நடைபெறும்  அத்தொகுதி  ஆண்டுக்  கூட்டத்துக்கு  நஜிப்  வந்தால் நிலவரம்  கலவரமாகிடலாம்  என்ற  அச்சமே  காரணமாகும்

பிரதமருமான  நஜிப், 1எம்டிபி  விவகாரத்தில்  குறைகூறியதற்காக ஷாபியைப்  புறநகர்,  புறநகர்  மேம்பாட்டு  அமைச்சிலிருந்து  தூக்கியது  அத்தொகுதியினருக்குப்  பிடிக்கவில்லை.

செம்பூர்ணாவில்  உள்ள  அம்னோ  அடிநிலை  உறுப்பினர்கள்  கேட்டுக்கொண்டதன்பேரிலேயே  நஜிப்புக்குப்  பதிலாக  முகைதின்  அழைக்கப்படுவதாக  ஷாபிக்கு  அணுக்கமான  வட்டாரமொன்று  கூறிற்று.

“(நஜிப்பை)  அழைத்தால் நிலைமை  கட்டுமீறிச்  சென்று  விடலாம்  என அஞ்சுகிறோம்”, என்று  அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

செம்பூர்ணா  அம்னோ  துணைத்  தலைவர்  நாசிர் சகரான், நஜிப்    புறக்கணிக்கப்பட்டது  குறித்து  கருத்துரைக்க  மறுத்தார்.

“நிலைமையை மோசமாக்க  வேண்டாம்  அதனால்  நான்  கருத்துரைக்க  மாட்டேன்”, என்றாரவர்.

ஷாபியுடன்  முகைதினும்  1எம்டிபி  விவகாரத்தைக்  குறைகூறியதற்காக  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  வெளியேற்றப்பட்டார்  என்பது  தெரிந்ததே.