பெர்சே பங்கேற்பாளர்கள் கைது செய்யப்படலாம்: ஜாஹிட் எச்சரிக்கை

Jpegபெர்சே  பேரணி  முடிந்து  விட்டாலும்  பேரணி  பங்கேற்பாளர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்   சாத்தியம்  இருப்பதாக துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  எச்சரித்துள்ளார்.

“(பேரணியில்)  யாரும்  கைது  செய்யப்படவில்லை  என்பதால் போலீசும்  கோலாலும்பூர்  மாநகர்  மன்றமும்  மற்ற  அமலாக்கத்  துறைகளும்  எந்த  நடவடிக்கையும்  எடுக்காது  என்பது  பொருளல்ல.

“நிலைமையைக்  கண்காணித்து  வருகிறோம்.  பேரணியில்  தலைவர்களின்  ஒவ்வொரு  செயலையும்,  பேசிய  ஒவ்வொரு  சொல்லையும்  ஆராய்ந்து  கொண்டிருக்கிறோம்.

“பேரணிக்குப்  பின்னணியில்  இருந்தவர்களையும் கண்காணித்து  வருகிறோம்”.

குறிப்பாக, வெள்ளிக்கிழமை  தடை  செய்யப்பட்ட  மஞ்சள்  நிற  பெர்சே 4  டி-சட்டை  அணிந்தவர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்றாரவர்.

பேரணியின்போது  சட்டமீறலில்  ஈடுபட்டதாகக்  கண்டுபிடிக்கப்படுவோரும்  கைது  செய்யப்படுவார்கள்  என  உள்துறை  அமைச்சர்  எச்சரித்தார்.