ஆட்சியாளர் அறிக்கை பற்றி விவாதிக்க 2நாள்களை ஒதுக்குவீர், நாடாளுமன்றத்துக்கு வலியுறுத்து

confஅக்டோபர்  மாத  இறுதியில்  நாடாளுமன்றத்தின்  பட்ஜெட்  கூட்டத்தின்போது   முதல்  இரண்டு  நாள்களை  ஆட்சியாளர்கள்  மன்றம்  நேற்று  வெளியிட்ட  அறிக்கையை  விவாதிக்கப்  பயன்படுத்திக் கொள்ள  வேண்டும்  என  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அது (அறிக்கை) நற்சிந்தனையும் நாட்டுப்பற்றும்  கொண்ட  மலேசியர்கள்  கவலை  கொண்டுள்ள மூன்று  விசயங்களைச்  சுருக்கமாக எடுத்துரைக்கிறது.  அவையாவன:  ரிம50 பில்லியன் 1எம்டிபி ஊழல், சட்ட  ஆளுமை  அபாயகரமான  நிலையில்  இருப்பது, தேச  ஒற்றுமை  எந்த  நேரத்திலும்  உடைந்து  போகும் நிலையில்  இருப்பது”, என  லிம் ஓர்  அறிக்கையில்  கூறினார்.

சட்ட  ஆளுமை  குறித்து  ஆட்சியாளர்கள்  கவலை  கொண்டிருப்பது  “நியாயமானதே”, என்றாரவர்.

முன்னாள்  அம்னோ  தலைவர்  கைருடின்  அபு  ஹசான் பாதுகாப்புக்  குற்றச்  சட்டத்தின்கீழ்  கைது  செய்யப்பட்டிருப்பதும்   சட்டப்  பேராசிரியர்  அஸ்மி  ஷரோம்-மீது  தேசிய  நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்பட்டிருப்பதும்  “தீய  நோக்கத்துடனும்  தேர்ந்தெடுக்கப்பட்ட  முறையிலும் வழக்கு  தொடுக்கப்படுவதற்கும் விசாரணை  செய்யப்படுவதற்கும்” ஆன இரண்டு  எடுத்துக்காட்டுகளாகும்  என்றாரவர்.