நஜிப் ஒரு கோழை, மாத்தியாஸ் சாடினார்

Mathaias1பிரதமர் நஜிப்பும் அவரது சகாக்களும் “கோழைகள்” என்று காவலில் வைக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் வர்ணித்தார்.

தாம் கைது செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர் உண்ணாவிரதத்தையும் தொடங்கினார்.

“நான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பது பிரதமர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள், அவருக்கு விசுவாசமான ஆனால் விவேகமற்ற அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள், ஆகியோரின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.

“நஜிப்பின் தலைமையில் வழிநடத்தப்படும் அம்னோவின் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கோழைகள் என்பதோடு நம்பிக்கைத்துரோகிகள் என்பதை மலேசிய மக்களுக்குக் காட்டுவதற்காக நான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட நேரத்திலிருந்து நான் எனது உண்ணாவிரத்தத்தைத் தொடங்கி விட்டேன் என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

டாக்டர் மகாதிரின் முன்னாள் உதவியாளரான சாங் இன்று பிற்பகலில் சோஸ்மா என்றழைக்கப்படும் சட்டம் செக்சன் 124K மற்றும் 124L ஆகியவற்றின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.