மாணவர் காணொளி: பெற்றோர் பிள்ளைகளுக்குக் கிழக்கத்திய கலாச்சாரத்தைக் கற்றுத்தர வேண்டும்

studentபெற்றோர்  பிள்ளைகளுக்கு  நல்ல  பழக்கவழக்கங்களைக்  கற்றுத்தர  வேண்டும்  அப்போதுதான்  அவர்கள்  கீழைநாட்டு  விழுமியங்களுக்கு  எதிரானவற்றைச் செய்ய  மாட்டார்கள்  என  பெற்றோர்- ஆசிரியர்  சங்கக்  கூட்டுமன்றத்  தலைவர்  முகம்மட்  அலி  ஹசான்  கூறினார்.

காணொளி  ஒன்றில்  மாணவி  ஒருவரைக்  கட்டிப்பிடித்து  கன்னத்தில்  முத்தமிடும் மாணவனின்  தாயார்  தெரிவித்த  கருத்துக்கு  எதிர்வினை  ஆற்றியபோது  அலி  ஹசான்  அவ்வாறு  குறிப்ப்பிட்டார்.

மலேசியானியிடம்  பேசிய  மாணவனின்  தாயார்  அவர்கள்  சிறார்கள்  என்று குறிப்பிட்டு  அந்த  விவகாரத்தைப்  பெரிதுபடுத்தக்  கூடாது  என்று  கேட்டுக்கொண்டார்.

ஆனால், அலி  பொது  இடத்தில்  இப்படிப்பட்ட  செயலில்  ஈடுபட்டதற்காக அம்மாணவர்கள்  வெட்கப்பட  வேண்டும்  என்றார்.

“இப்படிப்பட்ட  நடப்பதைப்  பெற்றோர்தான்  தடுக்க  வேண்டும். அவர்கள்  சிறார்கள்  என்று  சொல்லி அவற்றை  நியாயப்படுத்த  முயலக்  கூடாது”, என்றாரவர்.