காய்கறி பயிர் செய்வீர் காசை மிச்சப்படுத்துவீர்: துணை அமைச்சர் வலியுறுத்து

plantமக்கள்  பூக்கள், மரங்கள்  நடுவதைவிட  தங்களுக்கு  உணவாகப்  பயன்படும்  காய்கறிகளைப்  பயிர்  செய்வதே  மேலானது  என  விவசாய,  விவசாயம்  சார்ந்த  தொழில் துணை  அமைச்சர்  தாஜுடின்  ரஹ்மான்  வலியுறுத்தினார்.

அப்படிச்  செய்வதால்  இறக்குமதி  செய்யப்படும்  காய்கறிகளுக்குச்  செலவிடுவதைத்  தவிர்க்கலாம்  என்று  குறிப்பிட்ட  அவர்,  அமெரிக்க  டாலருக்கு  எதிராக  ரிங்கிட்  மதிப்பு  குறைந்திருப்பதால்  இறக்குமதி  செய்யப்படும்  காய்கறிகளின்  விலை  அதிகரித்துள்ளது  என்றார்.

“நாம்  ‘வாருங்கள்  பயிர் செய்வோ’ இயக்கத்தில்  சேர்ந்து  நமக்குத்  தேவையானதைப்  பயிர்  செய்தால் அவற்றை  வாங்க  வேண்டிய  அவசியம்  இருக்காது. நாணய  மாற்று  விவகாரமும்  இருக்காது. ஆகவே,  இதுவே  பயனான  நடவடிக்கை”, என்றவர்  சொன்னார்.

‘வாருங்கள்  பயிர்  செய்வோ’  என்பது  மக்களைக்  காய்கறி  பயிர்  செய்வதற்கு  ஊக்குவிக்கும்  ஓர்  இயக்கமாகும். ஏப்ரல்  மாதம்  அது  தொடங்கியது.