புலம் பெயர் தமிழர்கள் உதவினால்! யார் கையையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை! செல்வம்

selvam_vanni_001புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது தமிழ் உறவுகள் வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவி செய்தாலேயே தமிழ் மக்கள் மற்றவர்களிடம் கை ஏந்தும் நிலை வராது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் இரனைப்பாலையில் எமது தாயகம் என்னும் பெயரில் அரைக்கும் ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாயக மண்ணில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்டு இயங்கும் குடும்பங்களுக் தொழில் வாய்பளிக்கும் நோக்கில் மேற்படி ஆலை புலம்பெயர் நாட்டில் இருந்து கிரித்தி குணரட்னம் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டார்.

இங்கு உரையாற்றிய அவர்,

புலம்பெயர்த்துள்ள எமது உறவுகள் இங்குவந்து பார்த்து இதுபேன்ற பல உற்பத்தி நிறுவனங்களை உருவாக்கி,  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வாழ்வதாரத்தை மேம்படுத்தவேண்டும்.

புலம்பெயர்த்துள்ள எமது உறவுகள் சிறு உதவியாக 1ருபா வழங்கினாலே வடக்கு கிழக்கு மக்கள் யாருடைய கையை ஏந்தமுடியாத ஒரு சூழல் ஏற்படும்.

புலம்பெயர்த்துள்ள எமது உறவுகள் எங்களுடைய தேசம் அவர்களுடைய தேசம் என்பதால் கடும் குளிரிலும் வெயிலிலும் போராடிவருகின்றார்கள் அதுபோல் எமது தேசத்தில் பல முதலீட்டை செய்வதன் மூலம் அவர்களும் இலாபமடைந்து எமது உறவுகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.

-http://www.tamilwin.com

TAGS: