அடுத்த ஆண்டில் மேலும் 8 நெடுஞ்சாலைகளில் டோல் உயர்வு?

tollசில  நெடுஞ்சாலைகளில்  சாலைக்  கட்டணம்  உயர்ந்து  ஒரு  மாதம்  ஆகிறது. அதற்குள்  இன்னொரு  அதிர்ச்சி  அறிவிப்பு. அடுத்த  ஆண்டு  மேலும்  8 நெடுஞ்சாலை  பராமரிப்பாளர்கள்  சாலைக்  கட்டணத்தை  உயர்த்த  உரிமை  பெற்றிருப்பார்களாம்.

பொதுப்பணி  அமைச்சர்  பட்சில்லா  யூசுப்  இன்று  மக்களவையில்  இதை  அறிவித்தார்.

சாலைக் கட்டணத்தை  உயர்த்தும்  சாலைப்  பராமரிப்பாளர்களின் கோரிக்கையை  அரசாங்கம்  புறந்தள்ளினால்  இழப்பீடாக  ரிம593.32 மில்லியன் கொடுக்க  வேண்டியிருக்கும்  என்றாரவர்.

சாலைக்  கட்டணத்தை  உயர்த்த  உரிமை  பெற்றுள்ள  அந்த  8 நெடுஞ்சாலைகள்  வருமாறு:

வடக்கு- தெற்கு  விரைவுசாலை (பிளஸ்), இரண்டாவது இணைப்பு  விரைவு  சாலை,  வடக்கு- தெற்கு  மத்திய இணைப்பு (எலிட்), சிரம்பான் -போர்ட் டிக்சன் நெடுஞ்சாலை, ஷா ஆலம்  விரைவுசாலை(கெஸாஸ்), லெபோராயா  டமன்சாரா- பூச்சோங் (எல்டிபி), வட  கிள்ளான் பைபாஸ், பட்டர்வொர்த்- கூலிம்  விரைவுசாலை.

“ஒப்பந்தப்படி  இந்த  நெடுஞ்சாலைகள் கட்டணத்தை  உயர்த்த  உரிமை  பெற்றுள்ளன. ஆனல், அதை  அனுமதிப்பது  பற்றி  இன்னும்  நான்  முடிவு  செய்யவில்லை”, என பாட்சில்லா  கூறினார்.