நூருல்: என்னைக் கண்டிக்கும் தீர்மானமா? கொண்டுவரட்டும், கவலை இல்லை

censureலெம்பா  ப்ந்தாய்  எம்பி  நூருல் இஸ்ஸா  அன்வார்,  தம்மைத்  தேச  துரோகச்  செயலில்  ஈடுபட்டதாகக்  குற்றஞ்  சாட்டுவோருக்கு  எதிராக  சட்ட  நடவடிக்கை  எடுப்பது  பற்றி  ஆலோசித்து  வருகிறார்.

“என்னைத்  தேச  துரோகச்  செயல்களுடன்  இணைத்துப்  பேசும்  போலீஸ்  படைத்  தலைவர்(காலிட்  அபு  பக்கார்), (புறநகர்,  வட்டார  மேம்பாட்டு அமைச்சர்)  இஸ்மாயில்   சப்ரி  யாக்கூப்  போன்ற  தலைவர்களுக்கும்  தனிப்பட்டவர்களுக்கும்  எதிராக  வழக்கு  தொடுப்பது  பற்றி  வழக்குரைஞர்களுடன்  கலந்து  அலோசித்து  வருகிறேன்”, என  நூருல்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

பிரதமர்துறை  அமைச்சர் அஸலினாவுக்கு  துணிச்சல்  இருந்தால் நாடாளுமன்றத்தில்  தம்மைக்  கண்டிக்கும்  தீர்மானம்  கொண்டுவரட்டும். அதைச்  சந்திக்க  ஆயத்தமாக  இருப்பதாகவும்  அவர்  சொன்னார்.

“தெளிவான  மனத்துடன்  அதை  எதிர்கொள்வேன்”, என்றாரவர்.