ஆதாரம் இருந்தால் போலீசில் புகார் செய்யுங்கள்: சார்ல்ஸுக்கு அறிவுறுத்து

rizalசார்ல்ஸ்  சுரேஷ்   மொராய்ஸ், அவரின்  சகோதரரரின்  கொலை  பற்றிக்  கூறும்  குற்றச்சாட்டுகளைப்  போலீஸ்  புகார்  ஆக  பதிவு  செய்ய  வேண்டும்  என  பிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரின்  உதவியாளர்  கூறினார்.

“யார்  வேண்டுமானாலும்  குற்றம்  சுமத்தலாம்.

“அவரிடம்  ஆதாரம்  இருப்பது  உண்மையானால்  அவர்  போலீசில் புகார்  செய்து  அவர்களையும்  சட்டத்துறை  தலைவரையும்  விசாரிக்கச்  சொல்ல  வேண்டும். இதில்  நாங்கள்  எதுவும்  சொல்ல  விரும்பவில்லை”, என  ரிஸால்  மன்சூர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

இவ்விவகாரத்தை  போலீஸ்  கையாள்வதுதான்  நல்லது  என்றாரவர்.

அரசு  வழக்குரைஞரான  கெவின்  அந்தோனி  மொராய்ஸ்  கொல்லப்பட்டதன்  பின்னணியில்  சதி  இருப்பதாக  சார்ல்ஸ்  கூறிக்  கொண்டிருப்பதற்கு  எதிர்வினையாக  ரிஸால்  இவ்வாறு  கூறினார்.