ஐ.எஸ்.அமைப்புக்கு எதிரான தாக்குதல்: ஆயத்தமாகும் ஜேர்மனி

germany_vows_france_001ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு எதிராக பிரான்சுடன் இணைந்து பாரிய தாக்குதல் திட்டத்தை முன்னெடுக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.

பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் ஐ,எஸ்.அமைப்புக்கு எதிராக பிரான்ஸ் படைகள் கடுமையான வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ரஷ்யாவுடன் இணைந்து ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராக பிரான்ஸ் நடத்தி வரும் இந்த தாக்குதல்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜேர்மனி அரசு 1,200 துருப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஜேர்மனியை பொறுத்தமட்டில் இராணுவத்தின் அதிகமான துருப்புகளை வெளிநாட்டில் பயன்படுத்த இருப்பது இதுவே முதன்முறையாகும்.

போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை செலுத்த 1,200 சிறப்பு இராணுவ வீரர்களை தெரிவு செய்யும் பணி நடைபெற்று வருவதாக ஜெனரல் வோல்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசிடம் இருந்து உரிய அறிவிப்பு வந்த அடுத்த சில தினங்களில் துருப்புகள் புறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, டொர்னாடோ வகை உளவு ஜெட் விமானங்கள், கடற்படை கப்பல்கள், விண்வெளியில் எரிபொருள் நிரப்புவதற்கான விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் என

அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரான்சிடம் உறுதியளித்துள்ளது ஜேர்மனி அரசு.

கள நிலவரங்களை கண்டறியும் பொருட்டு 6 டொர்னாடோ உளவு விமானங்களை ஜேர்மனி அனுப்பியுள்ளது, இந்த விமானங்கள் மோசமான காலநிலையிலும் இரவிலும் கூட துல்லியமாக படங்கள் எடுக்கும் என வோல்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராக ஜேர்மனி இராணுவம் ஏன் நேரடி தாக்குதலை முன்னெடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த வோல்கர்,

கூட்டுப்படையினருக்கு போதுமான துருப்புகள் இருப்பதாகவும் அதுவே தற்போதைய சூழலில் போதுமானது எனவும் தெரிவித்தார்.

மேலும், களநிலவரம் குறித்து தேவையான தகவல்களை சேகரிப்பது கூட்டுப்படைகளுக்கு பேருதவியாக இருக்கும், அந்தப் பணியை டொர்னாடோகள் செவ்வனே செய்துவருவதாக குறிப்பிட்டார்.

ஐ.எஸ்.அமைப்புகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் ஜேர்மனி ஆபத்து குறைவான பணிகளையே தெரிவு செய்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெனரல் வோல்கர்,

எதிரியின் நிலைக்கு சென்று தாக்குதல் நடத்துவதும், அப்பகுதிக்கு சென்று உளவு பார்ப்பதும் ஆபத்தானதே என்றார்.

-http://world.lankasri.com