விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த விசேட மேல் நீதிமன்றம் அமைப்பு

lttelogoதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் வகையில் விசேட மேல் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட மேல் நீதிமன்ற ஆணையாளராக ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதியாக 31 வருடங்கள் சேவையாற்றியுள்ள ஐராங்கனி பெரேராவினால் பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இனோகா செவ்வந்தி என்ற இராணுவ சிப்பாயின் கொலை மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் மடுவந்தி கொலை ஆகியன பல வழக்குகளுக்கு அவரினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்ட முடியும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1979ஆம் ஆண்டு சட்ட பட்டப்படிப்பை நிறைவு செய்து சட்டத்தரணியாக ஐராங்கனி பெரேரா சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilcnnlk.com

TAGS: