அமெரிக் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதைத் தற்காத்துப் பேசுகிறார் ஐஜிபி

igஇன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப்  போலீஸ் (ஐஜிபி)  காலிட்  அபு  பக்கார்,  வழக்குரைஞர்  அமெரிக்  சித்துவை  போலீஸ்  விசாரணைக்கு  அழைத்திருப்பதைத்  தற்காத்துப்  பேசினார்.

அமெரிக்,  ஒரு  வணிகரான  சார்ல்ஸ்  சுரேஷ்  மொராய்ஸ்  சத்திய  பிரமாணம்(எஸ்டி)  தயாரிக்க  உதவினார்  என்பதால்தான் விசாரணைக்கு  அழைக்கப்படுவதாக  காலிட்  கூறினார்.

“உண்மைதான் (சத்திய  பிரமாணத்தில் கையெழுத்திட்டது  சார்ல்ஸ் என்பது). ஆனால், எஸ்டி-இன்  உள்ளடக்கம் முக்கியத்துவம்  வாய்ந்தது  என்பதால்  அதைத்  தயாரிக்க  உதவிய  வழக்குரைஞரிடம்  அது  பற்றித்  தகவலறிய  விரும்புகிறோம்.

“சார்ல்ஸை  எப்போது  விசாரிக்கப்  போகிறோம்  என்பது தெரியவில்லை……. அவரை  அழைத்தபோது  அவர்  ஓடிப்  போனார். அடுத்து  எப்போது  அவரைத் தொடர்பு  கொள்வோம் (விசாரணைக்கு)  அவரது  உதவியைப்  பெறுவோம்  என்பது  தெரியவில்லை”, என  புக்கிட்  அமானில் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

சார்ல்ஸ்  நாட்டைவிட்டு  வெளியேறுமுன்னர்  அவருக்கும்  அமெரிக்குக்குமிடையில்  நடந்ததைத்  தெரிந்துகொள்ள  போலீஸ்  விரும்புவதாக  காலிட்  கூறினார்.