எம்ஏசிசி-க்குக் கண்காணிப்பு தேவை இல்லை

azimமலேசிய  ஊழல்  தடுப்பு  ஆணைய (எம்ஏசிசி)த்தின்  ஆலோசனை  வாரியம்,  அந்த  ஊழல்  தடுப்பு  அமைப்பை  அமலாக்க  நிறுவன  நேர்மை  ஆணைய(ஈஏஐசி)த்தின் கண்காணிப்பில் வைக்க  வேண்டும்  என்று  கூறப்பட்டிருப்பதை  நிராகரிக்கிறது.

எம்ஏசிசி-யே ஒரு  சுயேச்சை  அமைப்பு  அதனால் அது  “தேவையே  இல்லை”  என  ஊழல் தடுப்பு  ஆலோசனை  வாரியத்தின்  தலைவர் துங்கு  அசீஸ்  இப்ராகிம்  கூறினார்.

இது கட்டுப்பாடுகள்-மிக்க   சூழலை  உருவாக்கும்.  ஏற்கனவே  மலேசியா  கட்டுப்பாடுகள்  மிகுந்த  நாடுகளில்  ஒன்றாகக்  கருதப்படுகிறது  என்றாரவர்.

ஈஏஐசி  கடந்த  வாரம்,  எம்ஏசிசி,  சமூக   நலத்துறை,  பங்குச்  சந்தை  வாரியம்  மற்றும்  நிறுவனங்களின்  ஆணையம்  ஆகியவற்றைக்  கண்காணிக்கும்  அதிகாரம்  தனக்கு  அளிக்கப்பட  வேண்டும்  என்று  கூறியிருந்தது.