தமிழ்ப்பள்ளியே என் தேர்வு, இனவெறியா? – கே.பாலமுருகன்

balamurugan2-300x250மலேசியாவில் மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரும்பான்மையினரால் தொடர்ந்து சீண்டப்பட்டும்/ ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை சமூகம் தன் அடையாளங்களின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் பற்று நிறைந்த சூழலிலேயே எதிர்க்கொள்ளும். அச்சமூகத்தின் பிடிமானமே அத்தகைய அடையாளங்கள்தான்.

அந்த அடையாளங்களை நேரடி விவாதத்திற்கு எடுப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தொனி மிக முக்கியமானது. அது கொஞ்சம் பிசகினாலும் அச்சமூகத்தின் நம்பிக்கையை நேரடியாகப் பாதிக்கும். பன்முகச் சூழலில் வாழும் யாவருக்கும் இது தெரிந்திருக்க வேண்டும். இனம் சார்ந்த அடையாளங்களை விவாதிக்கலாம்; ஆனால் கேலியோ ஆதாரமற்ற குற்றசாட்டுகளையோ முன்வைக்கக்கூடாது.

நம் கருத்தை ஒன்றின்மீது வைக்கும்போது எந்த அளவிற்கு அதற்கான தரவுகளையும் அதனைச் சார்ந்த தொடர்புடைய சான்றுகளையும் சேகரிக்க உழைத்துள்ளோம் என்பதைப் பொருட்டே அக்கருத்தின் நம்பக்கத்தன்மை அடங்கியுள்ளது. நம் சமூகத்தில் வாழும் நல்ல சிந்தனையாளர்கள், கலைஞர்கள் பத்திரிகை செய்தியின் முதல் பக்கப் பரப்பரப்பிற்கெல்லாம் செவிசாய்க்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

மாற்றுக் கருத்தாக இருந்தாலும் அதனை விவாதத் தொனியிலேயே முன்வைக்கும் திறம் பெற்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இதுபோன்ற விடயங்களில் கிண்டலையும் கேலியையும் கொண்ட தொனியைக் கொண்டிருப்பது பொறுப்பற்றவர்களின் வழிமுறையாகும்.

இப்பொழுது உதயசங்கர் அவர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மீது வைத்திருக்கும் கருத்துகளின் அடிப்படையில், அது குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு.

தமிழ்ப்பள்ளிகள் காப்பியடிக்கும் கலாச்சாரத்தை வளர்க்கிறது – உதயசங்கர்

//apabila berada di SMK, kumpulan pelajar kaum India ini hilang “tempat bergantung” kerana guru menghalang mereka meniru; berbeza dengan budaya sewaktu di SJKT//

அவருடைய கூற்றின்படி இடைநிலைப்பள்ளிகள் காப்பியடிப்பதை முற்றகத் தவிர்க்கின்றது ஆனால், தமிழ்ப்பள்ளிகள் அக்கலாச்சாரத்திப் பேணுகின்றது ஆகும். இதற்கு அவரிடம் எவ்வித எழுத்து ரீதியிலான ஆதாரம் இல்லை. யாரோ சொன்னார்களாம்.

2014ஆம் ஆண்டில் தேர்வுத் தாள் கசிந்த பிரச்சனையில் தமிழ்ப்பள்ளிகள் மட்டும் சிக்கிக் கொள்ளவில்லை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தேசியப் பள்ளியில் அறிவியல் தேர்வுத்தாளே முதலில் கசிந்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சான்று: http://www.themalaysianinsider.com/bahasa/article/polis-siasat-kes-kertas-sains-upsr-bocor

“எனக்கு யூ.பி.எஸ்.ஆர் முக்கியமில்லை. 7 ஏக்கள் பெற்றாலும் உடனே பல்கலைக்கழகம் போக முடியாது. முதலாம் படிவம்தான் போக முடியும்.” என அறிவியல் தேர்வுத்தாள் கசிந்ததையொட்டி மலாய்க்கார்ர் பெற்றோர் ஒருவர் அளித்தப் பேட்டி அது. சான்று: http://www.beritasemasa.com.my/soalan-upsr-bocor-haji-darus-awang-kpm

மேலும், தேர்வுத்தாள் கசிவு தொடர்பான பிரச்சனைகள் இடைநிலைப்பள்ளிகளில் இல்லையா? 2013ஆம் ஆண்டில் எஸ்.பி.எம் கணிதம் தாள் கசிந்ததன் தொடர்பில் நாட்டில் பெரும் சர்ச்சை உருவானதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு: http://www.cikguhailmi.com/2013/11/soalan-matematik-spm-bocor-ini-dalangnya.htmlhttp://mforum1.cari.com.my/portal.php?mod=view&aid=6353

Tamil 2ndary school - MPSஆக, தமிழ்ப்பள்ளிகளின் மீதே அனைத்து புகார்களையும் குவிக்க முயலும் மனநிலையுடனே உதயசங்கர் தன் கருத்துகளை முன்வைத்திருக்கிறார் எனத் தெரிய வருகிறது. நாட்டு நடப்பை அறிந்த ஒருவர் தேர்வுத்தாள் கசிவில் தமிழ்ப்பள்ளியை மட்டும் குறைசாற்ற வாய்ப்பில்லை. அது தேர்வு உருவாக்கும் விளைவுகள் குறித்தான சிக்கல் என்றே நினைக்கிறேன்.

மாணவர்களை வீட்டுக்குச் சென்றே அழைத்து வரும் பழக்கம்

//Tugas guru SJKT termasuk pergi ke rumah murid, memandikan mereka, memakaikan baju sekolah, menyuapkan sarapan, basuh punggung selepas berak dan membawa mereka ke sekolah!//  – See more at: ttp://www.themalaysianinsider.com/opinion/uthaya-sankar/article/persoalan-kempen-sjkt-pilihan-kita#sthash.TpC0zeDl.dpuf Guru Penyayang – Tindakan Kementerian Pelajaran. Konsep: Guru penyayang menjiwai bahawa murid mereka merupakan aset penting yang perlu diberi perhatian, dijaga, dibimbing, dihargai kewujudannya dan disayangi setiap masa.

மேலே குறிப்பிட்ட்தைப் போல இத்திட்டம் கல்வி அமைச்சால் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே நம் பள்ளி ஆசிரியர்கள் ஒருவேளை மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாமையை எதிர்க்கொண்டாலோ அல்லது பள்ளிக்கு மட்டம் போட்டாலோ உடனடியாகத் தன் வாகனத்தில் சென்று அழைத்து வருவார்கள். தோட்டப்புறங்களில் வாத்தியார் தன் ஆமை காரில் போய் பள்ளிக்கு வராமல் திரிந்து கொண்டிருக்கும் நம் பிள்ளைகளை அக்கறையோடு அழைத்து வந்திருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ( துரைசாமி ஐயா, 1950களில் ஆசிரியராக இருந்தவரின் நேரடி வாக்குமூலம்)

ஆகவே, ஒரு மாணவன் மீது அன்பு கொள்வதும் அவனின் மீது அக்கறை எடுத்துக்கொள்வதன் இன்னொரு வடிவம்தான் அவனை வீட்டுக்குச் சென்று அழைத்து வருவது. Fasa pertama Pelan Guru Penyayang adalah mengalu- alukan kehaduran murid.

கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட அன்புமிக்க ஆசிரியர் கலாச்சாரத்தின் முதல் படிநிலை ‘மாணவர்களைப் பள்ளிக்கு இன்முகத்துடன் வரவேற்பதாகும்’. அதன் தொடர்ச்சியாக ஒரு மாணவன் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவனை அழைத்து வரப் பள்ளி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசாங்காத்தின் கோரிக்கையாகும்.

Seaport Tamil school1ஆகவே, உதயசங்கர்’ ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்று பிட்டத்தைக் கழுவி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என சில சோம்பேறி மாணவர்கள் நினைப்பதாக்க் கூறும் குற்றசாட்டு அடிப்படையற்றவை’ அவர் கிண்டலடிக்க நினைப்பது தமிழ்ப்பள்ளிகளை அல்ல; கல்வி அமைச்சின் திட்டத்தை என நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால், அதே சமயம் ஆசிரியர்கள் வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்வார்கள் என எதிர்ப்பார்க்கும் சூழல் வந்தால் அதனை நிச்சயம் கண்டிக்கவே வேண்டும். அத்தகைய நிலைமை இன்னும் உருவாகவில்லை. அதனைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும் கூடாது. தன் சமூகத்தின் மீது ஓர் ஆசிரியரோ பள்ளியோ அக்கறைக்கொள்வது கண்டிப்பு கொள்வதும் வரவேற்க வேண்டிய விசயமே தவிர அதனைத் தனக்கு சாதகமாகவும் பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. முன்பெல்லாம் பிள்ளைகளுக்குக் காய்ச்சல் வந்தாலும் பள்ளிக்கு அனுப்புவார்கள். பள்ளிக்கூடம் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கை. (2008ஆம் ஆண்டில் எனக்கு இந்த அனுபவம் நேர்ந்த்து.

பள்ளிக்கூடமும் ஆசிரியர்களும் பலவகையான பிரச்சனைகளைச் சந்தித்தும் தான் வாழும் சமூகத்தின் குழந்தைகள் மீது அக்கறைக்கொள்வதை வேடிக்கையான ஒன்றாகக் கருதக்கூடாது. இன்று என் பள்ளியில், ஒரு பையன் அவன் வீட்டு சீன அண்டை அயலாரின் பையனைக் கல்லால் அடித்த்தற்காக அவனுடைய பெற்றோர் பள்ளியில் வந்து புகார் செய்கிறார். இதன் தர்மம் என்ன? அவன் அத்தவற்றை செய்யப் பள்ளிக்கூடமும் ஒரு காரணம் என அப்பெற்றோர் முறையிடுகிறார். அப்படியென்றால் ஒரு பையனின் உருவாக்கத்தில் பெற்றோர்களின் பங்கென்ன?

பள்ளிக்கூடம் என்பது ஒரு சமூகத்தின் இணைப்பு. பலவகையான சூழலிலிருந்து, குடும்ப நிலையிலிருந்து பலத்தரப்பட்ட மாணவர்கள் வர நேரிடும். அத்த்தைய சூழலில் எந்த வேறுபாடுமின்றி அவனுக்குக் கற்பிப்பதே பள்ளிக்கூட்த்தின் கடமை. சமூகத்துடன் எப்படி ஒத்திசைவது என்பதையும் அவன் அங்கிருந்து கற்றுக் கொள்கிறான்.

ஆனால், எப்படியும் ஒரு மாணவனின் உருவாக்கத்தில் ஆசிரியர்களோடு பெற்றோர்களும் ஒன்றிணைந்தாலே நாம் எதிர்ப்பார்க்கும் ஒரு தலைமுறையை உருவாக்க முடியும். ஆகவே, ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்து மாணவர்களை எழுப்பிப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல நேர்ந்தால் அது தார்மீகமான அக்கறையையும் அன்பையும் காட்டுகிறதே தவிர அது சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் காரியமல்ல. கல்வி அமைச்சின் திட்டமானதும் இதனையே முன்னுறுத்துகின்றது. ஆகவே, இதனை முன்னெடுக்கும் தமிழ்ப்பள்ளிகள் கல்வி அமைச்சின் கொள்கையைப் பின்பற்றுகிறது என்றே அர்த்தம். சான்று: http://www.slideshare.net/osowlay/்pelaksanaan-programgurupenyayang.

தமிழ்ப்பள்ளியே நன் தேர்வு எனும் வாசகம் இனப்பற்றா அல்லது இனவெறியா?

‘தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு’ எனும் முழக்கம் சமீபமாகத் தொடர்ந்து நம் சமூகத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். முதலில் இதுபோன்ற ஒரு நிலை/ பிரச்சாரம் செய்யும் நிலை தமிழ்ப்பள்ளிகளுக்கு வந்திருக்கக்கூடாது. ஆனால், தாய்மொழி கற்பதில் தொடர்ந்து எல்லாம் நாடுகளிலும் பிரச்சனைகள் உதிர்த்துக் கொண்டேதான் இருக்கின்றன.

ஆனால், தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு எனும் முழக்கம் உருவான பிறகு ஊடகங்களும் பத்திரிகைகளும் இத்திட்டத்துடன் இணைந்து தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சர்வதேச அளவில் பங்குபெற்று வெற்றிப்பெறும் செய்திகள் பரப்பரப்பாகப் பகிரப்பட்டு வந்தன. இது ஒருவகையில் ஊடகங்களின் கொண்டாட்டமாகவும் இருந்தது என்றே சொல்லலாம்.

தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்கள் அவர்களின் உருவாக்கத்திற்கு அப்பள்ளியே காரணம் என நேரடி வாக்குமூலம் கொடுத்திருப்பதையும் உதயசங்கரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

சான்று: களம் இதழ், பிப்ரவரி 2015, இரா.ரிஷிகேஸ்( நேர்காணல்)

ஆகவே, தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு என்கிற திட்டம் அரசியல் நோக்கமுடையது என அவர் முழுவதுமாக ஒதுக்குவது ஆதாரமற்றது. அது தொடங்கப்பட்ட்தன் பின்னணியில் என்ன அரசியல் இருந்திருந்தாலும், அதனைச் சமூகம் தத்தெடுத்துக் கொண்டு தமிழ்ப்பள்ளியின் மீதும் தாய்மொழிக் கல்வியின் மீதும் தன் முழுமையான ஈடுபாட்டையும் காட்டத் துவங்கியது உண்மையே.

பின்வரும் ஆதாரங்கள், உதயசங்கர் குற்றம்சாட்டுவதைப் போல தமிழ்ப்பள்ளிகளில் படித்த மாணவர்களின்/ படித்துக் கொண்டிருக்கும்போதே அடைந்த சாதனைகள்:

கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வி சுஷ்மிதா த/பெ விஜியன், செல்வி பிரவினா த/பெ இராமகிருஷ்ணன், ரஷிகேஷ் த/பெ இராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் மின்சார சேமிப்பு இயந்திரம் என்ற புது அறிவியல் கண்டுபிடிப்பில் வெற்றிப் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

tamilschool_studentsகூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் ரஷிகாஷ் த/பெ இராமகிருஷ்ணன் 2013-ஆம் ஆண்டு வடிவமைப்புக் கண்டுப்பிடிப்புகள் (REKACIPTA) போட்டியில் கலந்து வெற்றிப் பெற்று அனைத்துலக போட்டிக்காக ஹாங்கோங் (Hong Kong)(2013) மற்றும் லண்டன் (LONDON) (2014) சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் ஶ்ரீஅர்வேஷ் த/பெ இராமகிருஷ்ணன் அவர்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வடிவமைப்புக் கண்டுப்பிடிப்புகள் (REKACIPTA) போட்டியில் சிறந்து விளங்கி அனைத்துலக ரீதியில் அமெரிக்கா(2012), புருனாய்(2014) மற்றும் இந்தியா(2014) போன்ற நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்துச் சென்றுள்ளார்.

கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் பூபதி த/பெ வேலாயுதம் பூப்பந்து போட்டியில் சிறந்து விளங்கி அனைத்துலக ரீதியில் வருகின்ற நவம்பர் 2014-இல் சீனாவிற்குச் செல்லவிருகின்றார்.

வலம்புரோசா தமிழ்ப்பள்ளியின் மாணவி வைஸ்ணவி த/பெ அருள்நாதன் உலகமே வியக்கும் வண்ணம் “GOOGLE DOODLE” போட்டியில் பங்கெடுத்து வெற்றிப் பெற்றார். இவ்வெற்றி மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் நாடளாவிய நிலையில் நடத்தப்பட்ட இளம் ஆய்வாளர்கள் விழாவில் வெற்றிப் பெற்று அனைத்துலக ரீதியில் நடைபெற்ற சென்றுள்ளனர் என்பது பெருமைப்படக்கூடிய சாதனையாகும்.

2014-இல் புதுடில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில்  சிரம்பான், கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி மாணவி செல்வி நித்தியலெட்சுமி சிவநேசன் இரண்டாவது நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம் ரவூப் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் களிமண்ணால் மிகப்பெரியச் தேசியக் கொடி செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

மலாக்கா, புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வி அஞ்சலி சிவராமன், செல்வி ஷோபனா சிவராமன், செல்வன் நிரோஷன் கெலேமன் இவ்வருடம் (2014) சென்னையில் நடைபெற்ற அனைத்துலக சிலம்பப் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு மட்டுமல்லாது தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

2014-இல் உயர்தரப் பள்ளிகள் எனும் சிறப்புப் பெற்று ஜோகூர் ரேம் தமிழ்ப்பள்ளி, பாகங் ரிங்லெட் தமிழ்ப்பள்ளியும் மற்றும் குழுவகைப் பள்ளியாக பேராக் கிரிக் தமிழ்ப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.

ஆகவே, உதயசங்கர் முன்வைக்கும் தமிழ்ப்பள்ளிகள் இதுநாள் வரையிலும் தேர்வில் காப்பியடித்தே மாணவர்களைப் பழக்கப்படுத்தியுள்ளது என்கிற குற்றசாட்டு அர்த்தமற்றது என நிருபுணமாகிறது. தேர்வு என்பதே மாணவர்களைச் சோர்வாக்க்க்கூடியதுதான். இன்றைய நிலையில் தேர்வு என்பது மன்னம் செய்ததைக் கக்கும் ஓர் அங்கமாகவே விமர்சிக்கப்படுகிறது. தேர்வு உருவாக்கும் விளைவுகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. மலேசியாவில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளும் தேர்வு வழிமுறையின் மூலம் பல பாதிப்புகளையும் விளைவுகளையும் சந்தித்து வருகின்றன. இதனை ஒரு தனிப்பட்ட விவாதமாக ஆக்கலாம்.

tamil_school‘தமிழ்ப்பள்ளியே என் தேர்வு’ எனும் திட்டத்தின் மீது எனக்கும் தனிப்பட்ட விமர்சனம் உண்டு. ஆனாலும், அது அரசியல்வாதிகளின் கையிலிருந்து மக்களிடம் சென்ற பிறகு உருவாக்கிய உணர்வலைகள் கவனிக்கத்தக்கது என்றே குறிப்பிட வேண்டும். தமிழ்ப்பள்ளியே எங்களின் தேர்வு என இன்று சமூகம் இத்தனை அக்கறையோடு முழங்குவதற்கு தாய்மொழிக் கற்றலுக்கான முக்கியத்துவம் அறிந்தவர்கள் உணரக்கூடும்.

ஒரு சிறுபாண்மை இனத்தவரின் பண்பாட்டையும், கலை கலாச்சாரங்களையும், மொழியையும் பாதுகாக்கும் / கற்பிக்கும் இடமாக இருப்பதுதான் தாய்மொழிப் பள்ளிகள். மலேசியப் பண்முக நாடு. பல்லின மக்கள் வாழும் நாட்டின் தேசியக் கொள்கையில் அவரவர் தன் தாய்மொழியைத் தன் தாய்மொழிப் பள்ளியில் கற்றுக் கொள்வதற்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை மட்டுப்படுத்த நினைக்கும் யாவரும் ஜனநாயக நாட்டில் இருக்கத் தகுதியவற்றவர்கள். (http://balamurugan.org).