சாலே: சாபா சிஎம் பதவிக்குச் சுழற்சிமுறையைவிட இப்போதுள்ள முறையே சிறந்தது

cm sசாபா முதலமைச்சர்  மூசா  அமான்  அப்பதவிக்கு  வந்து  அடுத்த  மாதத்துடன்  13 ஆண்டுகள்  ஆகும்  என்று  தெரிவித்த   அமைச்சர்  சாலே  சைட்   கெருவாக்,  முதலைமைச்சர்  பதவிக்கு  முன்பிருந்த  சுழற்சி  முறையைவிட  இப்போதுள்ள  முறையே  சிறந்தது  என்றார்.

2003-இல்  மூசா  சாபா  வருவதற்கு முன்னர்  சாபா  முதலமைச்சர்கள்  சுழற்சிமுறையில்  நியமிக்கப்பட்டனர்.  முஸ்லிம்  பூமிபுத்ரா,  பிறகு  கிறிஸ்துவ  பூமிபுத்ரா,  பின்னர்  சீன  சமூகத்தைச்  சேர்ந்த  ஒருவர்  என  ஈராண்டு தவணைக் காலத்துக்கு  மாறிமாறி  முதலமைச்சர்  பதவியை  வகித்து  வந்தனர்.

சாலேயே, 1994-இலிருந்து  1996வரை  முதலமைச்சராக  இருந்துள்ளார்.  இரண்டாண்டுக்  காலத்தில்  பெரிய  மாற்றங்களைச்  செய்ய  முடியாது  என்றாரவர்.

பெரும்பாலான  நாடுகளில்  அரசாங்கத்  தலைவர்கள்    இரண்டு  தவணைகளுக்கு.  நான்கிலிருந்து  ஐந்தாண்டுக்  காலம் வரை  பதவியில்  இருப்பது  வழக்கமாகும்.

“திட்டமிடுவதற்கு  ஒரு  தவணைக்  காலம். திட்டங்களின்  விளைவைக்  காண்பதற்கு  ஒரு  தவணைக்  காலம்.

“அந்த  வகையில்  இப்போதுள்ள  முறையே  சிறந்தது  என்பேன். ஈராண்டுகள்  என்பது   நாற்காலியைச்  சூடேற்றவே  போதாது”, என  மலேசியாகி  நடத்திய  மின்னஞ்சல்  நேர்காணலில்  சாலே  கூறினார்.