முடங்கியது ஐ.எஸ் அமைப்பின் டுவிட்டர் கணக்குகள்!

isis_twitter_001சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோரின் கணக்குகளை கண்காணிக்க டுவிட்டர் நிறுவனம் பல குழுக்களை அமைத்திருந்தது.

இந்தக் குழுக்கள் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் டுவிட்டர் கணக்குகளை பயன்படுத்துவோரை கண்காணித்து வந்தது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 1.25 லட்சம் பேருடைய கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் தெரிவிக்கையில், ‘‘கடந்த ஆண்டு யூன் மாதம் வரை 1.25 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

டுவிட்டரை பிரசார தளமாக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை கண்டிக்கிறோம், பயங்கரவாத அச்சுறுத்தல்களை,டுவிட்டர் மூலம் அரங்கேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

-http://world.lankasri.com