இந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தாதவரை தமிழர் தரப்பு முன்வைக்கப் போகும் சமஷ்டி தீர்வு சாத்தியமாகுமா? பாகம்-2

maithiry_susma_002சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.

முஸ்லிம்கள் எந்தவொரு பாதிப்பும் அடையவில்லை என்றும் சான்றிதல் கொடுத்தார். ஆனால் அப்போது முஸ்லிம்கள் மீது பேருவல, தர்கா டவுன் தாக்குதல், பள்ளிவாசல்கள் உடைப்பு கொழும்பு பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகள் எரிப்பு என்று முஸ்லிம்கள் மீது ஒரு பதற்றம் இருந்தது.

ஆனால் இவைகள் எதுவுமே இல்லை என்றுதான் ஹக்கீம் நவநீதம்பிள்ளையிடம் சான்றிதழ் அளித்தார்.

தனது முஸ்லிம் இனம் மீது நடந்த தாக்குதல் பள்ளிவாசல் மீது நடந்த தாக்குதல்கள் இவைகளை மறைத்து மகிந்தவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஒருவரை எப்படி தமிழர் தரப்பு நம்பலாம்.

ஹக்கீமை பொறுத்த மட்டில் மஹிந்த ஹக்கீம் உறவு என்பது சந்தர்ப்பவாத உறவு விரும்பாத உறவு.

ஆனால் ரணில் ஹக்கீம் உறவு என்பது மிக மிக நெருக்கமான ஆழமான உறவுஇஅத்துடன் இனிவரும் காலம் தொகுதிவாரி தேர்தல் என்பதால் ஹக்கீம் கண்டி மாவட்டம் கலஹதர தொகுதியில் ஐ.தே.க சார்பாக போட்டியிடவுள்ளார்.

இந்த நிலையில் ஹக்கீம் தமிழ் முஸ்லிம் மக்கள் சார்பாக எந்தவொரு இடத்திலும் செயல்படக் கூடியவரல்ல.அரசு சார்பாகவும் சிங்கள மக்கள் சார்பாகவும் செயல்படக் கூடியவர்.

காரணம் ஹக்கீம் வடகிழக்கு தவிர்ந்த சிங்கள பகுதியில் பிறந்து வளர்ந்தவர். .அதனால் அவர் சிங்கள மக்கள் நலன் சார்ந்துதான் செயல்படுவார்.செயல்பட்டு வருகின்றார். இது மறுக்க முடியாத உண்மை.

தமிழர் தரப்பு அரசியலாகட்டும் புலிகள் தரப்பாகட்டும் ஹக்கீமுக்கு ஒரு கௌரவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

ஹக்கீம் புலிகளின் தலைவருடன் கிளிநொச்சியில் ஒப்பந்தம் செய்த போது புலிகளால் நல்ல முறையில் நடத்தப்பட்டார்.ஹச்கீமுக்காக புலிகளால் ஹலால் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

இவைகள் வரலாறு. .அதே போன்று தந்தை செல்வா பேருரை என்றால் தமிழர் தரப்பு ஹக்கீமை அழைத்து கௌரவப்படுத்தி வருகின்றார்கள். ஆனால் ஹக்கீமோ எந்தவொரு இடத்திலும் தமிழர் சார்பாக நீதியாக நியாமாக நடந்ததில்லை.

எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களுக்கு மஹிந்த அரசு அநீதி இளைத்ததாக ஹக்கீம் சொல்லவில்லை .எந்தவொரு இடத்திலும் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து செல்லவும் இல்லை.

ஹக்கீம் கம்பனி என்பது சிங்கள அரசின் அமைச்சுப் பதவி என்ற எலும்புத் துண்டுக்கும் முள்ளுதுத் துண்டுக்கும் அள்ளுப் பட்டுப் போகின்ற ஒரு கூட்டம்..அதைவிட முஸ்லிம் அரசியல்வாதிகள் என்பது சிங்கள அரசின் அமைச்சுப் பதவிக்கும் சொகுசுக்கும் அள்ளுப் பட்டுப் போகின்ற ஒரு கூட்டம்.முஸ்லிம் அரசியல் என்பது வியாபாரம்.

முஸ்லிம் சமுகம் என்றால் வியாபாரச் சமுகம் வணிகர் கூட்டம் அந்த உண்மையை பொய்யாக்காமல் இலங்கை அரசியலையும் முஸ்லிம் அரசியல் கூட்டம் வியாபாரம் வணிகர் பொருளாக மாற்றி விட்டது.

யார் அமைச்சர் பதவி அதிகமாக தருவார்களோ அவர்களுக்கு ஆதரவு அழிப்பது முஸ்லிம் அரசியல். .யார் பணம் அதிகமாக தருவார்களோ அவர்களுக்கு முஸ்லிம் அரசியல் ஆதரவு கொடுப்பதே இலங்கை அரசியலில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது.

இலங்கை அரசியலில் ஒரு கொள்கை இல்லாது ஒரு நேரான பாதை இல்லாது எந்தவொரு இலக்கும் இல்லாது தான் சார்ந்த சமுகம் எக்கேடாவது கெடட்டும் என்று சிங்கள அரசின் கைபொம்மையாக செயல்படுவது முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமே.

வெறும் அமைச்சுப் பதவிக்கு மட்டும் ஆசைப்பட்டு இனத்தை மதத்தை மொழியை அடகு வைத்து தான் சார்ந்த மொழிபேசும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து அரசியல் வியாபாரம் செய்வது இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் என்பது வெட்கப் பட வேண்டிய அவமானப்பட வேண்டிய கேடு கெட்ட மிகவும் மோசமான அரசியல் வியாபாரமாகும்.

இந்த அரசியல் வியாபாரம் என்பது செத்த சவத்தின் மேல் உணவு உண்பது போன்ற ஈனச்செயல்.இந்த ஈனச் செயல் முஸ்லிகளிடம் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் அளிக்கப்பட வேண்டும்.களையப்பட வேண்டும். என்பதே நடுநிலை வாதிகளின் ஆதங்கமாகும்.

தமிழனின் கடந்த 30 வருடகால நியாமான உரிமை போராட்டத்தில் தமிழன் செத்து மடிய இலாபம் பெற்றது முஸ்லிம் அரசியல் வியாபாரிகள்தான் என்பதை ஊண்டிச் சொல்வோம்.

தமிழனின் நியாமான போராட்டத்தை முஸ்லிம் புத்தி ஜீவிகள் தொட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் தட்டிக் கழித்துதான் வந்துள்ளார்கள்.

ஆனால் தமிழனின் போராட்டம் மூலம் கிடைத்த மாகாண சபையில் முற்று முழுதாக கார் பெர்மிட் தொட்டு அனுபவித்து வந்தவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் அணிதான்.

ஆனால் அந்த தமிழ் மக்களின் நியாமான போராட்டத்தை நிராகரித்துதான் இன்றும் அவர்களின் அரசியல் பயணம் போகின்றது.

அதனால் சமஷ்டி தீர்வில் ஹக்கீமை கூட்டமைப்பு இழுத்துக் கொண்டு வந்து எந்த தீர்வும் அடையப் போவதில்லை. அரசு சொல்லும் செயலுக்கு ஹக்கீம் ஆடுவார்.

தமிழர் தீர்வில் முஸ்லிம்களை ஒதுக்க மாட்டோம் – சம்பந்தர்

தமிழர் தீர்வொன்று வரும் போது வடகிழக்கு வாழ் முஸ்லிம்களை ஒதுக்க மாட்டோம் என்று சம்பந்தர் பல தடவைகள் சொல்லியுள்ளார்.

முஸ்லிம் மக்களைப் பொறுத்த மட்டில் தமிழர் அரசியல் மூலமாக எந்தவொரு பாதிப்பும் அடையவில்லை ஆனால் தமிழ் அரச அதிகாரிகள் மூலமாக பல சிக்கல்கள் கண்ட போதிலும் தமிழ் அரசியலால் இன்றும் எந்தவொரு பாதிப்பும் கண்டதில்லை.

சம்பந்தர் காலத்தினுள் தமிழர் தீர்வொன்று அமையும் போது முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லாமல் அமையும் என்ற முழுநம்பிக்கை முஸ்லிம் மக்களிடம் பரவலாகவே உள்ளது.

தீர்வு விடயத்தில் ஹக்கீமை விட சம்பந்தர் மேல் நம்பிக்கை உள்ளது .ஆனால் அந்தளவு ஹக்கீமை நம்பவே முடியாது.

ஒற்றையாட்சி முறை நீடித்தால், நாடு பிளவுபடும் ஆபத்து

சிறிலங்காவில் ஒற்றையாட்சி முறை நீடித்தால், நாடு பிளவுபடும் ஆபத்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்,  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் கடந்த வாரம் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து முன்னேற வேண்டுமாகவிருந்தால் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு மிகமுக்கியமானது.

இந்த அரசியலமைப்பே இனங்களுக்கிடையிலான உறவுகள் தொடர்பிலான புதிய முறைமையை அறிமுகம் செய்வதாகவும் இருக்கும்.

நாடு சுதந்திரமடைந்த காலம் முதல், எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மக்கள் சம அந்தஸ்துள்ள குடிமக்களாக வாழமுடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பொறிமுயை தொடர்பான விவாதம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்றமை துரதிஷ்டவசமானது.கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட விவாதம் பிற்போடப்பட்டு பெப்ரவரியில் எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்பு பொறிமுறையை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றுபட்டு பங்களிப்பை செய்யவேண்டுமென சிறிலங்கா அதிபர் கரிசனை காட்டுவதனாலேயே இவ்வாறு பிற்போடப்படுகிறது.

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே 1926ஆம் ஆண்டு இந்த நாட்டில் சமஷ்டி என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள சமஷ்டி முறைமை இலங்கைக்கு பொருத்தமானதெனவும் கூறியிருந்தார். நாடு பிளவு படாதிருக்க வேண்டுமென சிலர் கருதுவதால் தான் ஒற்றையாட்சி என்ற பதம் பிரதானமாக இருக்கவேண்டுமென கருதுகிறார்கள்.

ஆட்சி அதிகாரங்கள் சமஷ்டி அடிப்படையில் பகிரப்பட்டால் நாடு பிளவு படுவதற்கு வாய்ப்பில்லை, தேவையும் ஏற்படாது

தமிழர் பிரச்சினை பற்றி வாய் திறக்காத பிரதமர் மோடி

அதிபர் மைத்திரி வெற்றி அடைந்ததும் தனது முதல் பயணமாக கடந்த டெல்லி சென்றார். டெல்லியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக, அவருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,

தமிழர் பிரச்சினை மற்றும் அதுபற்றிய இந்திய நிலைப்பாடுகள் குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.இந்தச் சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினை,  13வது திருத்தச்சட்டம், போர்க்குற்ற விசாரணை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இந்தச் சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமரோ, சிறிலங்கா அதிபரோ,  தமிழர் பிரச்சினை குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடாது நழுவிக் கொண்டார் .தமிழர் பிரச்சினையை ஒரு பொருட்டாக மோடி எடுக்கவே இல்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும்,  திருமதி சிறிசேனவையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் முதல் அனைத்துலக பயணத்திற்கு நீங்கள் இந்தியாவை தேர்ந்தெடுத்ததில் எங்களுக்கு பெருமை.

இந்திய மக்கள் சார்பில் உங்களின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஒருங்கிணைந்த,  அமைதியான, செழிப்பான நாட்டை உருவாக்குவதில் உங்கள் மக்களின் கனவுகளை பிரதிபலிக்கிறது.

சிறிலங்கா, இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர். இந்திய மக்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் உங்களுடன் இருக்கும்.வரலாறு, மதம்,  கலாச்சாரம் ஆகியவற்றில் காலகாலமாக உள்ள இணைப்பு நமது உறவுக்கு திடமான அடித்தளத்தை அமைத்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்பு, மண்டல கடலோர பாதுகாப்பு போன்ற துறைகளில் நாம் ஆர்வம் காட்டி வருகிறோம்.

நமது இலக்கு ஒன்றுக்கு ஒன்று இணைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். நமது பாதுகாப்பும் செழிப்பும் பிரிக்க முடியாதவை.

சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நானும் இரு நாடுகள் உறவு மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்து பேசினோம். நானும் அவரும் நமது பொருளாதார ஒத்துழைப்பில் உள்ள பரவலான வாய்ப்புகளை நாங்கள் கொண்டு வருவோம்.

சிறிலங்காவின் பெரிய வர்த்தக பங்குதாரராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்புகள் உள்ளது என்பதை நான் அறிவேன்.

விவசாயம்,  சுகாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு தரும் வகையில் இது உள்ளது.பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்யவும் நானும் சிறிலங்கா அதிபரும் ஒப்புதல் அளித்துள்ளோம்.

மாலைத் தீவுகளுடனான முக்கோண கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சியை நாங்கள் வரவேற்றுள்ளோம். சிறிலங்காவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய உதவி திட்டம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதில் வீட்டு வசதி திட்டமும் அடங்கும்.

..இரு நாடுகளுக்கு இடையேயான உறவை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்வதற்கான முன் எப்போதும் இல்லாத வாய்ப்பு அமைந்துள்ளது.

அதிபர் சிறிசேனவின் பயணம் இதற்கான திசையில் நம்மை திடமாக அமர்த்தி உள்ளது” என்று தெரிவித்தார். எந்த இடத்திலாவது பிரதமர் மோடி தமிழர் பற்றிப் பேசவில்லை..

சமஸ்டி முறையிலான ஆட்சிக்கு இடமில்லை அதிபர் மைத்திரி

அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.புதிய அரசாங்கத்தின் உத்தேச அரசியல் அமைப்பில் சமஸ்டி ஆட்சி முறைமை குறித்த எந்தவொரு யோசனையும் உள்ளடங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல் அமைப்பு குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யார் எவ்வாறான கோரிக்கை விடுத்தாலும் வேண்டுகோள்களை முன்வைத்தாலும் அரசியல் அமைப்பில் சமஸ்டி முறைமையிலான ஆட்சிக்கு இடமில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா இலங்கையில்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், கடந்த வாரம் கொழும்பு வந்தார்.

.இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா இபிரதமர் ரணில் .வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர .தமிழ் கூட்டமைப்பு சம்பந்தர் தலைமையில் மாவை உட்பட பலர் சுஷ்மாவை சந்தித்து பேசியுள்ளார்கள்.

தமிழர் பிரச்சினை பற்றிப் பேசாத சுஷ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் சிறிலங்கா பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள, கூட்டறிக்கையில், இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றியோ அல்லது தமிழ் கூட்டமைப்பு இலங்கை அரசிடம் முன்வைக்கவுள்ள சமஷ்டி பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மீனவர்கள் விவகாரம் தொடக்கம், இடம்பெயர்ந்த மக்களுக்கு, வீடுகளைக் கட்டிக் கொடுக்கும்,  இந்தியாவின் உதவி வரை இந்த கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள போதிலும்,  தமிழர்களின் உரிமைகள் பற்றிய விடயம் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள் திட்டமிட்டே,  இந்த விவகாரத்தை தவிர்த்துள்ளதாகவே பார்க்கலாம்.

தமிழ்ச் சிறுபான்மையினரின் அரசியல் உரிமை கோரிக்கைகளுக்கு இந்தியா உதவுவதைஇ சிறிலங்கா மக்கள் சாதகமாக பார்க்கவில்லை என்றும், மாறாக அதனை உள்நாட்டு விவகாரத்தில் மற்றொரு தலையீடாகவே கருதுவதாகவும், சிறிலங்கா உணருவதாகவும் இந்தியா பார்கின்றது.

மறுபுறம் ஈழத் தமிழர் விடயமாக இந்தியா ஏதாவது முந்திக் கொண்டு பேசி விட்டால் இலங்கை அரசு இந்தியா மீது பகைமை கொள்ளும் என்றும் இலங்கை சீனா மீது மிகவும் அதிகமாக நெருங்கி விடும் என்றும் இந்தியா அஞ்சுகின்றது.

இதுதான் உண்மை.தமிழர் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை நமக்கேன் தேவை இல்லாத பிரச்சினை அவக பார்த்துக் கொள்ளட்டும் என்று இந்தியா நழுவிக் கொள்கின்றது.விலகிக் கொள்கின்றது.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் அதன் பொருளாதார முன்னேற்றம் அபிவிருத்தி பாதுகாப்பு என்ற கோணத்தில்தான் பார்கின்றது. இந்தியாவின் இந்தப் பார்வைக்குள் தமிழர் பிரச்சினை எங்கு வருகின்றது.

எந்த இடத்தில வருகின்றது .எங்குமே இல்லை. வடக்கில் இரண்டு லட்சம் மக்களை அளித்த இந்தியா இனிமேலும் தமிழர் நலனில் அக்கறை கொண்டு தமிழரை காப்பாற்ற வரும் என்று தப்புக் கணக்குப் போட்டு இந்தியாவை நம்புவது மூட நம்பிக்கைக்கு சமமானது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம்இ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது,

சிறிலங்காவில் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினமும், கௌரவம், நீதி, சமத்துவம் மற்றும் அமைதியாக வாழ்வதற்கான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு நாம் துணையாக இருப்போம் என்று கூறியிருந்தார்.

அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதற்கு அப்பால் செல்வது இந்த முயற்சிகளுக்கு பங்களிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும்இ தமிழர்களுக்கு சமமான உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதற்கும் அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறது.

இப்போது இந்தியா விலகிக் கொள்கின்றது. இந்தியாவை தமிழர் தரப்பு இனிமேலும் நம்புவது வீண் நம்பிக்கை கடலோரம் கட்டிய வீடு போன்றது.

(தொடரும்)

எம்.எம்.நிலாம்டீன்
[email protected]

தொடர்புடையது- இந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தாதவரை தமிழர்களின் சமஷ்டி தீர்வு சாத்தியமாகுமா?- பாகம்-1

-http://www.tamilwin.com

TAGS: