அரசாங்கத்தின் அசிங்கமான இரகசியங்களை மறைக்கத்தான் ஏஜி ஓஎஸ்ஏ-இல் திருத்தங்கள் கொண்டுவர விழைகிறார்

cynthiaஊழலையும்  வேண்டியவர்களுக்குச்  சலுகை  காட்டும்  போக்கையும்  எதிர்க்கும்  மையம்(சி4).  சட்டத்துறைத் தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி  அதிகாரத்துவ  காப்புச்  சட்ட(ஓஎஸ்ஏ) த்துக்குத் திருத்தங்கள்  கொண்டுவர  வேண்டும்  எனப்  பரிந்துரைத்திருப்பதை  வரவேற்கவில்லை.

அதை, “அரசாங்கத்தின்  அசிங்கமான  இரகசியங்களை  மக்கள்  கண்ணில்  படாமல்  மூடிமறைக்கும் வெட்கங்கெட்ட  செயல்”  என சி4  நிறுவன  இயக்குனர்  சிந்தியா  கேப்ரியல்  வருணித்தார்.

ஓஎஸ்ஏ  தேசியப்  பாதுகாப்புக்கு  அரணாக  விளங்கும்  ஒரு  கருவி  என்ற  நிலை  இப்போது  இல்லை  என  சிந்தியா  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“ஊழலை மூடிமறைக்கும்  கேடயமாக,  விளங்கும்  அது,  தகவல்  அளிப்போரைத்  தண்டிக்கிறது, தண்டனை  பயமின்றிச்  செயல்படும்  கலாச்சாரம்  உருவாகவும்  திருட்டுத்தனமிக்க  அரசியல்  தலைமை  உருவாகவும்  துணை  போகிறது”, என்றாரவர்.