‘நானும் மனிதன்தானே. என் உரிமைகள் என்ன ஆவது?’-சைபுல் கேள்வி

saifulமனித  உரிமைகள்  பற்றிப்  பேசும்   பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  ஆதரவாளர்களை  அவரால்  குதப்புணர்ச்சிக்கு  ஆளாக்கப்பட்ட  முகம்மட்  சைபுல் புகாரி  அஸ்லான்  சாடியுள்ளார்.

“பாதிக்கப்பட்டவன்  நான்.  நானும்  மனிதன்தானே.  மனித  உரிமைப்  போராட்டக்  குழுக்கள்  என்  உரிமைகளை  மட்டும்  மறுப்பதேன்.

“மனிதர்கள்,  யாரை  முக்கியம்  என  நினைக்கிறார்களோ,  யாரிடம்  செல்வாக்கும்  அதிகாரமும்  உள்ளதோ  அவர்களைத்தான்  பாதுகாப்பார்கள். என்னைப்  போன்ற  ‘சாமான்ய மக்களை’க்  கவனிக்க  மாட்டார்கள். இதுதான் உலகம்  போலும்”, என்று  சைபுல்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

எதிரணியினர்  அன்வார்  குற்றம்  செய்தவர்  அல்லர்  என்றும்  அவர்  ஒரு  அரசியல்  கைதி  என்றும்   தொடர்ந்து  வலியுறுத்தி  வருவது  பற்றி சைபுல்  இவ்வாறு  கருத்துரைத்தார்.

“இதை (அன்வாரின்  ஆதரவாளர்களின்  கூற்றை)  நம்பும்  வெளிநாட்டவருக்கும்  அனைத்துலக  அமைப்புகளுக்கும்  ஒன்றைக்  கூறிக்கொள்ள  விரும்புகிறேன். அவர்  ‘அரசியல் கைதி’ அல்ல.

“அவர்  ‘குற்றமிழைத்த  ஒரு  கைதி’.  ஜனநாயகம்  ஒடுக்கப்படுவதாகக்  கூறப்படுவதற்கும்  இதற்கும்  தொடர்பில்லை. அவர்கள் சொல்வதெல்லாம்  அப்பட்டமான  பொய்கள்  என்பதால்  ஆதரவு  கொடுப்பதையும்  நிதி கொடுப்பதையும்  நிறுத்துங்கள்”,  என்றார்.