கெடாவில் முக்ரிசுக்கு மேலும் ஒரு தோல்வி: மாநில அம்னோ தலைவர் பதவியும் பறிபோனது

routகெடா  மந்திரி  புசார்  அஹ்மட்  பாஷா  முகம்மட் ஹனிபா  இப்போது  மாநில  அம்னோ  தலைவருமாவார்.

முக்ரிஸ்  மகாதிருக்குப்  பதில்  பாஷாவை  மாநிலத்  தலைவராக  நியமனம்  செய்ய  அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பணித்திருப்பதாக  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  கூறினார்.

“கெடா  அம்னோவில்  செய்யப்பட்டுள்ள  மாற்றத்தை  அறிவிக்குமாறு  நஜிப்  எனக்கு  உத்தரவிட்டிருக்கிறார்.

“இவ்வேளையில் முக்ரிசுக்கும்  ஆயிரம்  முறை ‘நன்றி’  சொல்லிக்  கொள்கிறேன்”, என  தெங்கு  அட்னான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

கெடா  அம்னோவின்  துணைத்  தலைவராகக்  கல்வி  அமைச்சர்  மஹாட்சிர்  காலிட்  நியமனம்  செய்யப்பட்டிருக்கிறார்.

2013-இல், முக்ரிஸ்  கெடா  அம்னோ  தலைவராக  பொறுப்பேற்குமுன்னர்  பாஷாதான் தலைவராக  இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.