இது அடினானின் அப்பன் மாநிலம்தான், உங்களுடையது அல்ல: அஸ்மினுக்கு பிபிபி-இன் பதிலடி

jo opengபிபிபி  உதவித்  தலைவர்  அபாங்  ஜொகாரி  ஓபெங்,  சரவாக்கில் பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலியின்  தங்கும்  காலத்தைக்  கட்டுப்படுத்தும்  கட்சித்  தலைவரும்  முதலமைச்சருமான  அடினான்  சாதேமின்  முடிவைத்  தற்காத்துப்  பேசினார்.

“அஸ்மின்  சரவாக் அவருடைய (அடினான்) அப்பன்  மாநிலம்  அல்ல  என்று  கூறியுள்ளார்.

“அவருக்கு (அஸ்மினுக்கு(  நான்  பதில் அளிக்கிறேன்.

“இது அவரின் (அடினான்)  அப்பன்  மாநிலம்தான்.  உங்கள்  அப்பாவுடையதோ  தாத்தாவுடையதோ  அல்ல”, என  இன்று  மீரியில்  பிபிபி  கூட்டமொன்றில்  அபாங்  ஜொகாரி  கூறினார்.

விசாவை  நீட்டிக்க  விரும்பினால்  அதிகாரப்பூர்வமாகக்  கடிதம்  எழுதிக்  கேட்கலாம்  என்று  கூறிய  அடினானை சாடியபோது   அஸ்மின் அவ்வாறு கூறினார்.

“இது  உங்கள் அப்பன்  மாநிலம்  அல்ல.  இது  சரவாக்  மக்கள்  அனைவருக்கும்  உரியது”, என்று  அஸ்மின்  சாடியிருந்தார்.