கருத்துக் கணிப்பும் தமிழின அழிப்பும்!

tamilnaduதற்கால கருத்துக்கணிப்புகள் பற்றி அறிய புள்ளி விவரம் கணக்கியலில்(Statistics) பற்றி கொஞ்சம் காண்போம்…அனைத்து மக்களின் மனநிலையையும் அறிய அம்மக்களிளிருந்து ஒரு குறிப்பிட்ட மக்களின்(Sample) மனநிலையை அறிந்தால் அது பெரும்பாலும் அனைத்து மக்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்கும் என்பது தான் கோட்பாடு…இந்த Sample மக்களிலிருந்து பெறப்படும் முடிவும் அனைத்து மக்களிடமிருந்து பெறப்படும் முடிவும் முடிந்தளவு ஒத்துப்போகுமளற்கு Sampleஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்…அப்போது தான் Sampleலிருந்து பெறப்படும் கருத்துக்கணிப்பு உண்மை முடிவுடன் ஒத்துப்போகும்…

எந்த ஒரு கருத்துக்கணிப்பின் முடிவும் முடிந்தளவு அனைத்து வகைப்பட்ட மக்களின் மனநிலையையும் பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கவேண்டும்…சுருக்கமாகச் சொன்னால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி தான்…அனைத்துச் சோறும் ஒரே பண்பைக் கொண்டு ஒரே நிலையிலுள்ளதால், ஒரு பானை சோறு வெந்துவிட்டதா என்று அறிய ஒரு சோறு Sample போதும்…சமூக மக்களை எடுத்துக்கொண்டால், அவர்களில் பல வகைப்பட்ட மக்கள் பல நிலைகளில் பல பண்புகளுடன் பல புரிதல்களுடன் இருப்பார்கள்…

அனைத்து வகைப்பட்ட மக்களிடமிருந்தும் Sample எடுத்து கருத்துகணிப்பு நடத்தினால் தான் அந்த Sample கொடுக்கும் முடிவு சரியாக இருக்கும் அல்லது எந்தெந்த வகைப்பட்ட மக்கள்(குறைந்தபட்சம்(Minimum)) மனது அனைத்து மக்களின் மனதை பிரதிபலிக்குமோ அவர்களை Sampleஆக எடுத்துக்கொள்ள வேண்டும்…முடிந்தளவு சரியான Sampleஐ தேர்வு செய்வதென்பது தனி அறிவியல்…உதாரணமாக, ஒரு தொலைக்காட்சியில் எடுக்கும் கருத்துக்கணிப்பில் SMS மூலம் மக்கள் பங்கு பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்…இங்கு பங்குபெறும் மக்கள் தான் Sample…அதாவது, தன் வீட்டில் தொலைக்காட்சி அலைபேசி ஆகிய இரண்டையும் வைத்திருந்து அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சியைப் பார்க்கிற மக்கள் தான் இவர்கள் sample(அதிலும் SMS அனுப்ப நினைப்பவர்கள் இன்னும் குறைவு)…அப்படி SMS அனுப்புபவர்களின் மனநிலை அனைத்து வகைப்பட்ட மக்களின் மனநிலையையும் ஒத்துப்போகாது என்பதே நிதர்சனமான உண்மை…இருந்தாலும் அத்தொலைக்காட்சி இதைப் பற்றித் தெரியாத அப்பாவி மக்களிடம் அனைத்து மக்களின் மனநிலை போலக் காட்டும்…

கருத்துக்கணிப்பு மூலம் மக்களின் மனதில் உள்ள ஒரு கட்சி குறித்த பிம்பத்தை மாற்றமுடியும் என்பதால் கருத்துக்கணிப்பில் ஏமாற்றுவது எப்படி என்று ஒரு அறிவியலே உள்ளது…அதில் முதல் தலையாய தந்திரம், Sampleஐத் தேர்ந்தெடுத்தலில் உள்ளது…இரண்டாவது தந்திரம் போலியாக கருத்தைப் பதிவு செய்து எண்ணிக்கையை உயர்த்துதலில் உள்ளது…சில கருத்துக் கணிப்புகளில் கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே போலியாக எண்ணிக்கையைக் கூட்டுவதும் உண்டு…ஒரு குறிப்பிட்ட Choiceக்கு சாதகமாக இருக்கும் வண்ணம் Sampleஐத் தேர்ந்தெடுப்பது sampling bias என்று கூறுவார்கள்…அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட Sample என்பது biased sample என்று கூறுவார்கள்…

உதாரணமாக, ஒரு தேர்தல் நடக்கிறதென்றால், ஒரு தொகுதியில் நடத்தப்படும் கருத்துக் கணிப்பை மட்டும் வைத்து யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாது…அப்படிச் சொன்னால் அதற்குப் பெயர் sampling bias என்று அருத்தம்…

சில தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் நடுநிலையுடன் நடந்தாலும் அதற்கு வாக்களித்தவர்கள் அக்கருத்துக்கணிப்பை Manipulate செய்து biased sampleஐ உருவாக்குவார்கள்…

உதாரணமாக, தந்தி தொலைக்காட்சியின் கடைசி ஐந்து கருத்துக்கணிப்புகளைப் பார்ப்போம்(கீழே)…ஒவ்வொரு கருத்துக்கணிப்பின் மொத்த வாக்காளர்களையும் கவனியுங்கள்…கடைசி இரண்டு கருத்துக்கணிப்புகளுக்கு மட்டும் 7500 சொச்சம் வாக்காளர்கள் வந்தது எப்படி அதுவும் இரண்டிலும் திமுகவிற்கே அதிக வாக்குகள்…இதற்கு result manipulation என்று பெயர்(சிலர் இதை கணினி மூலம் பல அலைபேசி எண்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் அனுப்புவதைப் போலவே SMS அனுப்புவார்கள்)…அதாவது sampling manipulation செய்து முடிவை தங்களுக்கு சாதகமாக மாற்றி தனக்கு ஆதரவு உள்ளது போலக் காட்டி மக்கள் மனதில் இவர்களை மக்கள் நம்புகிறார்கள் எனவும்(collective crowd psychology) இதனால் இவர்கள் நல்லவர்கள் எனவும் இவர்களுக்கு ஆதரவு உள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குவதே இவர்கள் நோக்கம்…இதை திராவிடத்தில் யார் யார் எப்படி செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஆய்ந்தால் திராவிட அமைப்புகளும் இதற்கு உடந்தை போன்ற பல உண்மைகள் வெளியே வரும்…கட்டுமரத்திற்கு மெரினா பீச்சில் சமாதி கிடைக்க தான் இவ்வளவு போராட்டம்…

போதும் போதும்னு பார்த்தா கடைசில தமிழ் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் விடயத்தையும் இந்த பிழையான முறையை வைத்துச் செய்கிறார்கள்…தந்தி தொலைக்காட்சிக்கு என்னுடைய கேள்வி…ஒரு மாநிலத்தின் தலையெழுத்தையேத் தீர்மானிக்கும் கேள்விக்கு அம்மாநிலத்தில் உள்ள 7500 பேரை வைத்து தீர்மானிக்கலாமா…அதுவும் வீட்டில் தொலைக்காட்சி அலைபேசி ஆகிய இரண்டையும் வைத்திருந்து உங்கள் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களாக இருந்து அதிலும் SMS அனுப்புபவர்களே உங்கள் Sample எனும் போது உங்கள் கருத்துக்கணிப்பு சரியா…அதிலும், இத்தனை நாட்கள் கேட்ட கருத்துக்கணிப்புகள் சார்ந்த கேள்விகளுக்கும் இக்கேள்விக்கும் வந்த வாக்குகள் வித்தியாசத்தில் தெரியவில்லையா 7500 என்பதில் முக்கால்வாசிக்கு மேல் Fakeஆனவை என்று…அப்படித் தெரிந்தும் அப்புள்ளிவிவரம் சரியானது போலவும் அது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனநிலை என்பது போலவும் காட்டுவது சரியா…

மேலும் விவரத்திற்கு,

1. How to lie with statistics(7.8 MB) – Darrell Huff, Norton, New York, 1954 – http://www.horace.org/…/How-to-Lie-With-Statistics-1954-Huf…
2. http://en.wikipedia.org/wiki/Sampling_bias

ஆதாரம் : http://www.thanthitv.com/Poll/PreviousPollResult.aspx

1. ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.
A) அதிமுக – 1,484 – 20.0%
B) திமுக – 4,082 – 55.0%
C) காங்கிரஸ் – 816 – 11.0%
D) பா.ஜ.க – 890 – 12.0%
Total Vote(Sample) : 7422

2. 2016 தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்
அதிமுக – 33.0%
திமுக – 49.0%
மாற்றுஅணி – 16.0%
Total Vote(Sample) : 7522

3. விவசாயத்தில் தவறிழைத்தது…
காங்கிரஸ் – 38.0%
பா.ஜ.க – 44.0%
மாநில கட்சிகள் – 17.0%
Total Vote : 447

4. தமிழ் சினிமாவின் சிறந்த சிக்ஸ் பேக் கொண்ட ஹீரோ?
ஜெய் – 4.0%
தனுஷ் – 9.0%
சூர்யா – 60.0%
விஷால் – 11.0%
பரத் – 13.0%
Total Vote : 1762

5. சேவை பெறும் உரிமைச்சட்டம்
A) அவசியம் – 80.0%
B) தேவையில்லை – 10.0%
C) ஆய்வு தேவை – 9.0%
Total Vote : 260

மேலும் விழிப்புணர்விற்கு,

திராவிட வந்தேறி (தெலுங்கன், கன்னடன், மலையாளி) அல்ல தமிழன்டா”

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

“செங்கீற்றின் தமிழர் தேசம்” என்று யூ டுயூபு இல் (you tube) தட்டச்சு செய்யவும்.

https://www.youtube.com/channel/UC4GqFTBTVkLvolIpdxx9Big

-தமிழ்வேந்தன் தமிழன்

http://senkettru.com/…/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A…/

TAGS: