ஹாடி: டிஏபிக்கு இடமில்லை; சாபா, சரவாக்கை முஸ்லிம்கள்தாம் ஆள வேண்டும்

hadi aமுஸ்லிம்  பூமிபுத்ரா  ஒருவர்  சரவாக்கின்  முதலமைச்சராவதையே பாஸ்  விரும்புவதால்  அங்கு  டிஏபி  ஆட்சி  அமைக்க அது ஒருபோதும்  அனுமதிக்காது  என்று  அதன்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  கூறினார்.

இந்தியர்களையும்  சீனர்களையும்  குடிமக்களாக  ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால்,  தலைவர்  மலாய்  முஸ்லிமாகத்தான்  இருக்க  வேண்டும்.  கூச்சிங்,  தாமான்  சுக்மாவில்  250  பேர்  கலந்துகொண்ட  செராமா  ஒன்றில்  ஹாடி  இவ்வாறு  கூறினார்.

“பூமிபுத்ராக்கள்தாம்  சரவாக்கை  ஆள  வேண்டும். அதுவும் முஸ்லிம்  பூமிபுத்ரா  ஆள்வதையே  பாஸ்  விரும்புகிறது”, என  பாஸ்  தலைவர்  வலியுறுத்தினார்.